Published : Jan 11, 2023, 07:05 PM ISTUpdated : Jan 11, 2023, 09:11 PM IST
நடிகர் அஜித் மற்றும் விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'துணிவு' மற்றும் 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியான 24 மணி நேரத்தில், சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளதால் உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் படக்குழுவினர்.
சுமார் ஒன்பது வருடங்கள் கழித்து, விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படமும் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படமும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதால்... இருதரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு, நேற்று நள்ளிரவு முதலே இரண்டு படங்களையும் வரவேற்று வருகின்றனர்.
27
ஒரு சில ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக இரண்டு படங்களையும் வரவேற்றாலும், மற்றொரு தரப்பு ரசிகர்கள்... அஜித் தான் பெரிய நடிகர்... விஜய் தான் பெரிய நடிகர் என போட்டா போட்டியோடு, படத்தை வரவேற்றனர்.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில், நேற்று நள்ளிரவு முதலே அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கட்டவுட், பல லட்சம் செலவில் பேனர், தாரை தப்பட்டை மற்றும் பட்டாசு வெடித்து திருவிழாவை போல், இந்த படத்தை வரவேற்றனர்.
47
ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாட்டமாக இருந்தாலும், மற்றொரு புறம் ரணகளமான செயல்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னையில்... உள்ள சில திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் விஜயின் போஸ்டர்களையும், விஜய் ரசிகர்கள் அஜித்தின் போஸ்டர்கள் மற்றும் பேனர்களை கிழித்து செய்தப்படுத்தினர். அதோடு மட்டுமின்றி, ரசிகர்களின் தாக்குதலுக்கு இடையே சில போலீசாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இப்படி வெறித்தனமாக ரசிகர்கள் படத்தை வரவேற்ற நிலையில், படம் வெளியான 24 மணி நேரத்திலேயே சமூக வலைதளத்தில் படம் வெளியாகி உள்ளதால் உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் பட குழுவினர்.
67
சட்ட விரோதமாக படத்தை எந்த சமூக வலைதளத்திலும் வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வாரிசு மற்றும் துணிவு பட குழுவினர் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றமும் இந்த மனுவை விசாரித்த பின்னர்... சமூக வலைத்தளத்தில், வெளியாக தடை விதித்தது.
இதனை மீறி மீறும் விதமாக, தற்போது அஜித்தின் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் படம் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளேயே சமூக வலைதளத்தில், சட்ட விரோதமாக வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.