Bigg Boss: காதலனை கரம்பிடித்த ‘பிக்பாஸ்’ பிரபலம்.. திடீர் திருமணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

Published : Jan 11, 2023, 06:19 PM ISTUpdated : Jan 11, 2023, 06:20 PM IST

இந்திய பிரபலம் ராக்கி சாவந்த், தனது காதலன் அடில் துரானியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

PREV
17
Bigg Boss: காதலனை கரம்பிடித்த ‘பிக்பாஸ்’ பிரபலம்.. திடீர் திருமணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

1997ஆம் ஆண்டு பாலிவுட்டில் அக்னிசத்ரா படத்தின் மூலம் அறிமுகமான ராக்கி சாவந்த், தொடர்ந்து தன் கவர்ச்சியான கதாபாத்திரங்களால் கவனமீர்த்து வந்தார். இந்நிலையில் ராக்கி சாவந்த் தனது காதலர் அடில் துரானியுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

27

இருவரும் சில மாதங்களாக டேட்டிங்கில் இருந்தனர் என்றும், தற்போது இருவரின் திருமண புகைப்படங்களும், திருமண சான்றிதழ்களும் வைரலாகி வருகிறது.

37

வெளியான திருமண புகைப்படத்தில், ராக்கி சாவந்த் வெள்ளை இளஞ்சிவப்பு நிற ஷரரா அணிந்துள்ளார். அடில் துரானி கருப்பு சட்டையும், டெனிம் ஜீன்சும் அணிந்து எளிமையான தோற்றத்தில் காணப்படுகிறார். ராக்கி சாவந்த் மற்றும் ஆதில் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

47

பலர் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு சிலர் திட்டி வருகின்றனர். அதில் ஒருவர், ராக்கி சாவந்த் மருத்துவமனையில் தனது தாயாருக்காக அழுது கொண்டிருந்தார். இப்போது திருமணம் செய்து கொண்டார் என்று பதிவிட்டார்.

57

ராக்கி சாவந்தின் இரண்டாவது திருமணம் இது என்றும் கூறப்படுகிறது. முதலில் ரித்தேஷ் என்ற நபரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. ரித்தேஷ் உடனான ராக்கியின் திருமணத்தின் சில புகைப்படங்களும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

67

மும்பை தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை 2019இல் ரகசியத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனக்கு திருமணமான ரகசியத்தை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உடைத்தார்.

77

தொடர்ந்து கருத்து வேறுபாடுகளைக் கடந்து இவருடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில், ஆதில் கான் துரானி என்பவரை ராக்கி தற்போது காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளார்.

click me!

Recommended Stories