லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிலீசுக்கு முன்பே இப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. படமும் ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
பொன்னியின் செல்வன் படம் நவம்பர் மாதம் 11-ந் தேதி ஓடிடி-யில் வெளியிடப்பட இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது அதில் ஒரு டுவிஸ்ட் வைத்து படத்தை முன்கூட்டியே, அதாவது நவம்பர் 4-ந் தேதியே ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது அமேசான் பிரைம் நிறுவனம். அந்த டுவிஸ்ட் என்னவென்றால் இப்படத்தை தியேட்டரில் டிக்கெட் வாங்கி பார்ப்பது போல், ஓடிடி-யில் ரூ.199 செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என்பது தான்.