கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பான் இந்தியா படமாக வெளியானது இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.420 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது.
அதுமட்டுமின்றி திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த விக்ரம் படத்தை கொண்டாடும் விதமாக நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே பல்வேறு சக்சஸ் பார்ட்டிகளை கொடுத்தாலும், தற்போது இப்படத்தின் 100-வது நாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : “உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் வெகுவிமர்சையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களான கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த வெற்றிவிழாவில், விக்ரம் படத்தில் பங்களிப்பாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கமல்ஹாசனின் பிறந்தநாளன்று இந்த விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.