தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர் தான் ரைசா வில்சன்.
28
RaizaWilson
முன்னதாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 வில் வில்லியாக வரும் வசுந்தராவின் தனி உதவியாளராக நடித்திருந்தார் ரைசா வில்சன்.
38
RaizaWilson
பின்னர் இவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் போட்டியாளராகவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று கொடுத்தது.
இதன் விளைவாக பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட படங்களில் இவர் தோன்றியிருந்தார். இந்த படங்களில் இவருடன் பிக் பாஸில் இருந்த ஹரிஷ் கல்யாண் தான் நாயகனாக நடித்திருந்தார்.
58
RaizaWilson
முதல்முறையாக இவர் நாயகியாக அறிமுகமான பியார் பிரேமா காதல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இதை தொடர்ந்து வர்மா படத்தில் ரைசா வில்சன் நடித்திருந்தார். ஆனால் பாலா இயக்கிய வர்மா படக்கதை மாற்றப்பட்டு துருவுடன் இவர் நடித்த கதாபாத்திரம் வெளியாகவில்லை.
இதையடுத்து விஷ்ணு விஷாலுடன் எஃப் ஐ ஆர், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது காபி வித் காதல், துரத்தல், கருங்காப்பியம், காதல், காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
78
RaizaWilson
முன்னதாக தவறான முக சிகிச்சையின் காரணமாக பாதிக்கப்பட்ட ரைசா, தனது சிதைவடைந்த முகத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருந்தார். பின்னர் சிகிச்சை எடுத்துக்கொண்டு பழைய நிலைக்கு திரும்பிய போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது .
88
RaizaWilson
இவற்றையெல்லாம் கடந்து தற்போது இவர் விதவிதமான போட்டோ சூட் நடத்தி அதனை பகிர்ந்து வருகிறார். அதன்படி பிளாக் அண்ட் ஒயிட் போட்டோக்களை பகிர்ந்துள்ளார் ரைசா வில்சன்.