இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனின் நெருங்கிய நண்பரான சாம் அபிஷேக் கைது செய்யப்பட்டார். பின்னர் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் தன்னை கைது செய்ய முயல்வது குறித்து கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினம் மீராமீதுன் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதையடுத்து சாட்சி விசாரணை அன்று குற்றச்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு ஆஜராகாததால் மீரா மிதுன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை இன்று (ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு...என்னது ..ஏகே 61 தீபாவளிக்கு இல்லையா? வெளியான புதிய ரிலீஸ் அப்டேட்