அஜித் குமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 61 வது படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏகே 61 என தற்காலிகமாக பேரிடப்பட்டுள்ள இந்த படத்தை வலிமை, நேர்கொண்ட பார்வையை இயக்கிய ஹச் வினோத் மூன்றாவது முறையாக இயக்கி வருகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.