ரஜினிக்குன்னு ஸ்பெஷலா எதுவும் இல்ல... 1200 பேருக்கு சமைக்குறத தான் அவரும் சாப்பிடுவார் - சூப்பர்ஸ்டாரின் எளிமை

Published : Aug 29, 2022, 03:10 PM ISTUpdated : Aug 29, 2022, 03:13 PM IST

Jailer : ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பவர்களுக்காக உணவு தயாரிக்கும் காண்ட்ராக்டர் ஒருவர் அளித்த சமீபத்திய பேட்டியில், ரஜினியின் எளிமை பற்றி வியந்து பேசி உள்ளார். 

PREV
14
ரஜினிக்குன்னு ஸ்பெஷலா எதுவும் இல்ல... 1200 பேருக்கு சமைக்குறத தான் அவரும் சாப்பிடுவார் - சூப்பர்ஸ்டாரின் எளிமை

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இதில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வஸந்த் ரவி, விநாயகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலராக நடிக்கிறார்.

24

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரம்மாண்டமான ஜெயில் செட் ஒன்றை போட்டு அதில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் நெல்சன். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம். ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்த படமும், நெல்சன் கடைசியாக இயக்கிய பீஸ்ட் படமும் தோல்வியை தழுவியதால் இருவரும் ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... நட்சத்திரம் நகர்கிறது படம் பார்த்து மெர்சலான பாலிவுட் பிரபலங்கள்..“பா.இரஞ்சித்தோட பெஸ்ட் படம் இது” என புகழாரம்

34

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பவர்களுக்காக உணவு தயாரிக்கும் காண்ட்ராக்டர் ஒருவர் அளித்த சமீபத்திய பேட்டியில், ரஜினியின் எளிமை பற்றி வியந்து பேசி உள்ளார். தாங்கள் ரஜினிக்காக ஸ்பெஷலான உணவுகள் எதுவும் தயாரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ள அவர், படத்தில் பணியாற்றும் 1200 பேருக்கு என்ன சாப்பாடு சமைக்கிறோமோ அதைத் தான் ரஜினியும் சாப்பிடுவார் என கூறி உள்ளார்.

44

சிலர் உப்பு அல்லது காரம் கம்மியாக சாப்பிடுவார்கள் அதில் மட்டுமே வித்தியாசம் இருக்குமே தவிர மற்றபடி அனைவருக்கும் ஒரே உணவு தான் என கூறி உள்ளார். இன்றுமட்டுமல்ல என்றைக்குமே சூப்பர்ஸ்டார் தான் நடிக்கும் படங்களில் இதேபோன்று சமத்துவத்தை பின்பற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... தனுஷின் திருச்சிற்றம்பலம் பாடலை தத்ரூபமாக பாடிய திருமூர்த்தி.. குவியும் வாழ்த்துக்கள்

Read more Photos on
click me!

Recommended Stories