அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் பா.இரஞ்சித்.
இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்து இருக்கிறார். இதுதவிர கலையரசன், டான்ஸிங் ரோஸ் ஷபீர், சிந்துஜா விஜி, சார்லஸ் வினோத் உள்பட ஏராளமான நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தென்மா இசையமைத்து உள்ளார்.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே எஞ்சி உள்ள நிலையில், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மும்பை சென்ற இயக்குனர் பா.இரஞ்சித் அங்கு பாலிவுட் திரையுலக பிரபலங்களான அனுராக் கஷ்யம், நந்திதா தாஸ், நீரஜ் கைவான் போன்றோருக்கு தனது நட்சத்திரம் நகர்கிறது படத்தை திரையிட்டு காட்டியுள்ளார்.
அப்போது படத்தை பார்த்த மூவரும் வாயடைத்துப் போய்விட்டார்களாம். அந்த அளவுக்கு படம் சூப்பராக இருப்பதாக பாராட்டினார். படம் முடிந்து வெளியே வந்ததும் இயக்குனர் பா.இரஞ்சித்தை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன இயக்குனர் அனுராக் கஷ்யப். இதுவரை அவர் இயக்கிய படங்களிலேயே இது பெஸ்ட் என பாராட்டினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... அருவிக்கு அருகில் குதூகலமாக போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்