சமீபத்தில் வெளியான அருண் விஜயின் யானை படத்தில் நாயகியாகவும் தனுஷின் திருச்சிற்றம்பலத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராகவும் நடித்திருந்த பிரியா பவானி சங்கர்.
27
priya bhavani shankar
தற்போது விடுமுறையில் உள்ள இவர் உல்லாச சுற்றுலா சென்றுள்ளார். வெளிநாட்டில் அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் தொடர்ந்து பகிர்ந்து வரும் ப்ரியா பவானி தற்போது அருவிக்கு அருகில் இருந்து கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் கடைக்குட்டி சிங்கம் கசடதபர உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்த பிரியா பவானி சங்கர்.
சமீபத்தில் அருண் விஜய் மற்றும் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முன்னதாக மாபியா அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், தங்கும் விடுதி உள்ளிட்டவற்றிலும் தோன்றியுள்ளார் பிரியா பவானி சங்கர்.
தற்போது மீண்டும் எஸ் ஜே சூர்யா உடன் பொம்மை, ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், லாரன்ஸின் ருத்ரன், சிம்புவின் பத்து தல, உலக நாயகனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா பவானி.
67
priya bhavani shankar
வெப் தொடர்களையும் விட்டு வைக்காத இவர் டைம் என்ன பாஸ் உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்துள்ளார். கல்யாண முதல் காதல் வரை என்னும் சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானர் ப்ரியா பவானி சங்கர்.
77
priya bhavani shankar
இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசன் 5, தென்னிந்திய ஃபிலிம் பெயர் விருது, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 5, கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 1 போன்ற ஷோக்களில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.