மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் பிரேமம். நிவின் பாலி நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் ஆகிய மூன்று பேரும் ஹீரோயினாக நடித்திருந்தனர். இவர்கள் மூவரின் கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதியும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. இதனால் இன்றளவும் அவர்களுக்கு அடையாளம் தந்த படமாக பிரேமம் உள்ளது.
பிரேமம் படத்துக்கு பின்னர் இந்த மூன்று நாயகிகளுக்கு தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் நடிகை மடோனா செபஸ்டியன் தமிழில் விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கவண் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பேமஸ் ஆனார்.
இவர் நடிப்பதோடு மட்டுமின்றி அவ்வப்போது தனக்குள் இருக்கும் இசைத் திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். மலையாளத்தில் இரண்டு படங்களில் பாடியுள்ள அவர், தமிழில் கவண் படத்தில் இடம்பெறும் ஹாப்பி நியூ இயர் பாடலை டி.ராஜேந்தர் உடன் இணைந்து பாடி இருந்தார்.
நடிகை மடோனா செபஸ்டியன் உடல் எடையை குறைத்த பின்னர் விதவிதமாக போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.