என்ன கொடுமை சார் இது... இந்த சட்டையோட விலை 50 ஆயிரத்துக்கு மேலயா...! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லைகர் நாயகன்

Published : Aug 29, 2022, 10:11 AM IST

vijay deverakonda : நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்த விஜய் தேவரகொண்டா அணிந்திருந்த சட்டையின் விலை அறிந்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். 

PREV
14
என்ன கொடுமை சார் இது... இந்த சட்டையோட விலை 50 ஆயிரத்துக்கு மேலயா...! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லைகர் நாயகன்

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் ரிலீசான படம் லைகர். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இப்படத்தை நடிகை சார்மி கவுரும், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகரும் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்திருந்தார். 

24

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு ரசிக்கும் படி இருந்தாலும் மோசமான திரைக்கதை காரணமாக இப்படம் படு தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... காஸ்ட்லி வில்லனான விஜய் சேதுபதி... ஜவானில் நடிக்க மக்கள் செல்வனுக்கு ஷாருக்கான் கொடுத்த சம்பளம் இத்தனை கோடியா?

34

போதிய வரவேற்பு இல்லாததன் காரணமாக பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து இப்படம் தூக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர படத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள், நடிகர் விஜய் தேவரகொண்டா லைகர் படத்தின் புரமோஷனின் போது அணிந்திருந்த சட்டையையும் ட்ரோல் செய்து பதிவிட்டு வந்தனர்.

44

இந்நிலையில், நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்த விஜய் தேவரகொண்டா அணிந்திருந்த சட்டையின் விலை அறிந்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். ஒன்றோடு ஒன்று சம்பந்தமே இல்லாத 2-3 விதமான துணிகளை ஒன்றாக சேர்த்து தைத்தது போல் இருக்கும் அந்த சட்டையின் விலை இந்திய மதிப்பில் ரூ.69 ஆயிரமாம். இது Greg Lauren என்கிற பிராண்ட் சட்டையாம். இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன கொடுமை சார் இது என புலம்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தேவரகொண்டாவை பின்னுக்கு தள்ளிய தி லெஜண்ட்..என்ன விஷயம் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories