சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இதையடுத்து பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடி தான், சேதுபதி என இவர் ஹீரோவாக நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனாலும், சமீப காலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்களுக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி முதன்முதலில் வில்லனாக நடித்த படம் என்றால் அது சுந்தர பாண்டியன் தான். இதன்பின், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் மாஸான வில்லனாக நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார் விஜய் சேதுபதி. இப்படத்திற்கு பின்னர் தான் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில், விஜய் சேதுபதி தற்போது வில்லனாக நடிக்கும் படம் ஜவான். இப்படத்தில் அவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார். தமிழில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.