இந்தியாவின் வெற்றியை பலரும் கொண்டாடி வரும் நிலையில், இந்த போட்டியை காண சினிமா பிரபலங்கள் சிலரும் துபாய் ஸ்டேடியத்திற்கு சென்றனர். அதில் ஒருவர் விஜய் தேவரகொண்டா, அவர் நடித்த லைகர் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் ரிலீசான நிலையில், நேற்றைய போட்டியை காண ஸ்டேடியத்திற்கு விசிட் அடித்த விஜய் தேவரகொண்டாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.