சரத்குமார் நடிக்க மறுத்த அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாறு – ராமதாஸின் பயோபிக் ஃபர்ஸ்ட் லுக்!

Published : Jul 25, 2025, 10:41 PM IST

PMK Founder Ramadoss Biopic Movie Ayya : எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வரிசையில் மற்றொரு அரசியல் தலைவரான பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு அய்யா என்ற டைட்டிலில் படமாகிறது.

PREV
14
பாமக தலைவர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்று படம்

சினிமாவைப் பொறுத்த வரையில் அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது தற்போது நடைமுறையாக பின்பற்றப்பட்டு வரப்படுகிறது. இதற்கு முன்னதாக எம்ஜிஆர், காமராஜர், ஜெயலலிதா ஆகியோரது வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டது. இந்த வரிசையில் இப்போது புதிதாக பாமக நிறுவனர் ராமதாஸூம் இணைந்துள்ளார்.

24
ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படம்

இவரது வாழ்க்கையும் இப்போது படம்மாக்கப்பட இருக்கிறது. பாமக நிறுவனரான ராமதாஸ் இன்று தனது 86ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்று படமான அய்யா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் சேரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அய்யா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சரத்குமார் ஐயா என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

34
அய்யா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அவரைத் தான் இந்தப் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அவர் இந்தப் படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க மறுப்பு தெரிவிக்கவே அவருக்குப் பதிலாக ஆரியிடம் பேச்சுவாத்தை நடத்தப்பட்டு அவரும் ஓகே சொல்லவே படக்குழுவினர் அய்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

44
தமிழ் குமரன் புரோடக்‌ஷன்ஸ்

தமிழ் குமரன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜிகேஎம் தமிழ் குமரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ராமதாஸின் வாழ்க்கையில் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் படமாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories