
சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் சமூக வலைதளங்களில் அதிகளவில் ஃபேன் பாலோயர்ஸ் இருக்க வேண்டும், எப்போதும் டிரெண்டிங்கிலேயே இருக்க வேண்டும் என்ற மோகம் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அப்படித்தான் நீண்ட காலமாக தன்னை சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வைத்திருந்தவர் தான் டிக் டாக் புகழ் இலக்கியா. கிளாமர் மற்றும் கவர்ச்சிக்கு பெயர் போன இலக்கிய தனது ஆபாச உடை மற்றும் நடனத்தால் எப்போதும் ரசிகர்களுக்கு எப்போது தன் மீது கவனம் இருப்பது போன்று வைத்திருந்தார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது. சோஷியல் மீடியா பக்கமே அவரை காணோம். இதனால், ரசிகர்கள் இலக்கிய என்ற ஒரு பெயரையே மறந்திருந்தனர். இந்த சூழலில் தான் குன்றத்தூர் அபிராமி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மீடியா கவனம் முழுவதும் அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுற்றியே இருந்து வந்துள்ளது.
மேலும் அபிராமிக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது முதல் தற்போது வரையில் அவரைப் பற்றிய செய்திகள் தான் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தான் இன்ஸ்டாவில் 16 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ் கொண்டுள்ள இலக்கியா திடீரென்று தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து செய்தி வெளியானது. மேலும், யார் அந்த இலக்கியா என்று பலரும் தேட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், நேற்று அதில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்ட இலக்கியா, அதில், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் உடன் கடந்த 6 ஆண்டுகளாக தான் பழகி வருவதாகவும், அவர் பல்வேறு பெண்களுடன் பழக்கம் இருப்பதை பற்றி கேட்டதால், அவர் தன்னை அடித்ததாகவும் கூறியது மட்டுமின்றி, தன்னுடைய சாவுக்கு திலீப் சுப்பராயன் தான் காரணம் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இலக்கியாவுக்கு என்ன ஆச்சு என அவரது பாலோவர்கள் பதறிப் போயினர்.
இந்த நிலையில், இன்று டிக்டாக் இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி செய்தி வெளியானது. அவர் உடற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து திலீப் சுப்பராயன் விவகாரத்தால் தான் இலக்கியா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது மீண்டும் ஒரு பதிவை போட்டு ட்விஸ்ட் கொடுத்துள்ளார் இலக்கியா.
அந்த பதிவில், அனைத்துமே போலியான செய்தி என குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்த பதிவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதென்ன அந்தர் பல்டியா இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள். எல்லாமே போலி செய்தி என்றால் எதற்காக திலீப் சுப்பராயன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலக்கியா ஸ்டோரி போட்டார் என்கிற கேள்வி எழத் தொடங்கி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இலக்கியா போதையில் இருந்ததாக கூறப்பட்டது. அதனால் அவர் குடி போதையில் உலறிவிட்டாரா என்கிற கேள்வியும் எழுகிறது.
உண்மையில் அவர் தன்னை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும் என்பதாக இது போன்று நாடகமாடியிருக்கலாம் என்றும், ரசிகர்களின் கவனம் முழுவதும் தன் மீது இருக்க வேண்டும் என்றும், எப்படியாவது சினிமா வாய்ப்பு பெற்றிட வேண்டும் என்று மோடிவ்வோடு தான் இது போன்ற செயலில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. யூடியூப் மற்றும் இன்ஸ்டா பிரபலங்களுக்கு சினிமா பிரபலங்களை தாக்கி பேசி தங்களை இன்னும் கொஞ்சம் உயர்வாக வைத்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் தன் மீது இரக்கம் வர வழைத்து மீடியா அட்டென்ஷன் பெற்று சினிமா வாய்ப்பு பெறுகிறார்கள். அதில் இலக்கியா 2ஆவது கேட்டகரியைச் சேர்ந்தவராக இருப்பார் என்று தெரிகிறது.