என் சாவுக்கு திலீப் சுப்பராயன் தான் காரணம்... தற்கொ*க்கு முயன்ற யூடியூபர் இலக்கியா மருத்துவமனையில் அனுமதி!

Published : Jul 25, 2025, 02:37 PM IST

திலீப் சுப்பராயன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த டிக் டாக் இலக்கியா தற்போது தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
14
Elakkiya hospitalised

டிக் டாக்கில் வீடியோ போட்டு பேமஸ் ஆனவர் இலக்கியா. டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னர் இன்ஸ்டாவில் டான்ஸ் ஆடி வீடியோ பதிவிடத் தொடங்கிய இலக்கியாவுக்கு 16 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருக்கிறார்கள். இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். கிளாமராக வீடியோ போட்டு பேமஸ் ஆன இலக்கியா, தற்போது அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டதால் மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

24
இலக்கியா மருத்துவமனையில் அனுமதி

இலக்கியா பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்துள்ளார். இன்று பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இலக்கியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமான சாப்பிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அவர் அதிக அளவில் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

34
திலீப் சுப்பராயன் மீது இலக்கியா புகார்

ஆனால் இலக்கியா உடன் இருந்த நபர் அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றிருக்கிறார். தற்போது யூடியூபர் இலக்கியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறி இருந்தார். அவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தன்னுடைய சாவுக்கு திலீப் சுப்பராயன் தான் காரணம் என குறிப்பிட்டு இலக்கியா பதிவிட்டிருந்த பதிவு வைரலாகி வந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

44
தற்கொலைக்கு முயன்றாரா இலக்கியா?

இதனால் அவர் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது குற்றச்சாட்டு தெரிவித்த மறுதினமே யூடியூபர் இலக்கிய மருத்துவமனையில் சுய நினைவின்றி அனுமதிக்கப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலக்கியாவின் குற்றச்சாட்டு குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்காமல் மெளனம் காத்தி வருகிறார். இதனால் இவர்களிடையே என்ன பிரச்சனை என்பது புரியாத புதிராக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories