டிக் டாக் பிரபலம் இலக்கியா, திலீப் சுப்புராயன் குறித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி காட்டுத்தீ போல் பரவிய நிலையில், தற்போது மேலும் ஒரு பதிவை போட்டு ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
டிக்டாக் புகழ் இலக்கியாவுக்கு இன்ஸ்டாகிராமில் 16 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று அதில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்ட இலக்கியா, அதில், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் உடன் கடந்த 6 ஆண்டுகளாக தான் பழகி வருவதாகவும், அவர் பல்வேறு பெண்களுடன் பழக்கம் இருப்பதை பற்றி கேட்டதால், அவர் தன்னை அடித்ததாகவும் கூறியது மட்டுமின்றி, தன்னுடைய சாவுக்கு திலீப் சுப்பராயன் தான் காரணம் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் இலக்கியாவுக்கு என்ன ஆச்சு என அவரது பாலோவர்கள் பதறிப் போயினர்.
24
இலக்கியா மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், இன்று டிக்டாக் இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி செய்தி வெளியானது. அவர் உடற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதன் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து திலீப் சுப்பராயன் விவகாரத்தால் தான் இலக்கியா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது மீண்டும் ஒரு பதிவை போட்டு ட்விஸ்ட் கொடுத்துள்ளார் இலக்கியா.
34
போலி செய்தி என கூறிய இலக்கியா
அந்த பதிவில், அனைத்துமே போலியான செய்தி என குறிப்பிட்டிருக்கிறார் இலக்கியா. அவரின் இந்த பதிவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதென்ன அந்தர் பல்டியா இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள். எல்லாமே போலி செய்தி என்றால் எதற்காக திலீப் சுப்பராயன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலக்கியா ஸ்டோரி போட்டார் என்கிற கேள்வி எழத் தொடங்கி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இலக்கியா போதையில் இருந்ததாக கூறப்பட்டது. அதனால் அவர் குடி போதையில் உலறிவிட்டாரா என்கிற கேள்வியும் எழுகிறது.
ஒரு சிலரோ இது அவர் தன்னை வைரலாக்கிக் கொள்ள செய்த பப்ளிசிட்டி ஸ்டண்ட் என கூறுகிறார்கள். ஏனெனில் இலக்கியா கடந்த சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் அமைதி காத்து வருகிறார். அவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகளும் இல்லை. இதனால் பட வாய்ப்புகளை பிடிக்கவே அவர் இவ்வாறு செய்திருக்கக் கூடும் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இலக்கியாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. அவரை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகிறார்கள். அவர் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டும் எனவும் சில கூறி வருகிறார்கள்.