காதலிப்பது பெருசுல; அத சொல்ல துணிச்சலும், தைரியமும் வேணும் – இல்லனா இப்படித்தான் நடக்கும்: கார்த்திகை தீபம் 2!

Published : Jul 25, 2025, 07:49 PM IST

காதலிப்பது பெரிதல்ல, அதனை சொல்வதற்கான தைரியமும், துணிச்சலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் திரும்ப திரும்ப நடக்கும் என்பதற்கு கார்த்திகை தீபம் 2 ஒரு உதாரணமாக மாறி வருகிறது.

PREV
14
ரேவதியின் காதல் கடிதம்

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய காலகட்டத்தி இன்னமும் லவ் லெட்டரில் காதல் கடிதம் எழுதி அதனை கொடுப்பதற்கு எவ்வளவு கஷ்டம் பட வேண்டியதற்கு என்பதற்கு சிறந்த உதாரணமாக இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் கார்த்திகை தீபம் 2 சிறந்த உதாரணமாக மாறி வருகிறது. செல்போன், ஃபேஸ்புக், ஏஐ வீடியோ, எக்ஸ், லிங்க்டுஇன், இன்ஸ்டாகிராம், சாட்ஜிபிடி, ஜெமினி என்று இன்றைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

24
கார்த்திகை தீபம் 2

இந்த சூழலில் காதலை சொல்ல எத்தனையோ வழிகள் இருக்கும் போது இன்னமும் லவ் லெட்டரில் காதல் கடிதம் எழுதி வைத்துக் கொண்டு அதனை கொடுப்பதற்கு போராடும் சூழல் தான் இப்போது ரேவதி வாழ்க்கையில் நடைபெற்று வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் 2. குடும்பக் கதையை மையப்படுத்திய இந்த சீரியலில் கணவரான கார்த்திக் ராஜாவிடம் தனது காதலை சொல்ல ரேவதி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

34
சாமுண்டீஸ்வரி

ஒவ்வொரு முறையும் முயற்சி செய்யும் போது அது தோல்வியில் தான் முடிகிறது. தனியாக இருக்கும் போது சொல்ல முயற்சி செய்தார். காதல் கடிதம் எழுதி வைத்து அதன் மூலமாக சொல்ல முயற்சி செய்தார். இப்படி பல வழிகளில் முயற்சி செய்தும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வேறு வழியில்லாமல் எப்படியாவது கார்த்திக்கின் பிறந்தநாஇல் தனது மனதில் உள்ள ஆசைகளை அப்படியே லெட்டர் மூலமாக தெரியப்படுத்திட வேண்டும் என்று காதல் கடிதம் எழுதி வைத்தார்.

44
கார்த்திக் பிறந்தநாள், ரேவதி காதல் புரபோசல்

ஆனால், அதற்குள்ளாக ரேவதியின் மாமா மயில், மளிகை சாமான்கள் எழுதிய பேப்பரை காதல் கடிதம் எழுதிய டேபிள் வைத்தார். ஆனால், அவர் மளிகை கடைக்கு செல்வதற்கு முன்னதாக மளிகை சாமான்கள் எழுதிய பேப்பரை எடுப்பதற்கு பதிலாக காதல் கடிதம் எழுதிய பேப்பரோடு கடைக்கு செல்ல அங்கு கடைக்காரர் அதனை படித்து தவறாக எண்ணிக் கொண்டு மயில் வாகனத்தை திட்டு திட்டு என்று திட்டி தீர்த்துவிட்டார். மறுபுறம் கார்த்திக் ரேவதி எழுதிய கடிதம் என்று டேபிளில் இருந்த கடிதத்தை எடுத்து படிக்க அது மளிகை சாமான்கள் எழுதிய பேப்பர் என்று தெரிந்து கொண்டார்.

இதுவும் ரேவதிக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. என்னதான இந்த பழைய ஐடியாவாக இருந்தாலும் கார்த்திக் மீதான ரேவதியின் அன்பும், காதலும் இங்கு கடலையும் கடந்து சென்றுவிட்டது. ரசிகர்களுக்கு சீரியல் மீதான ஆர்வத்தை பார்க்க தூண்டுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories