மோதிரம் மாற்றி லிப் கிஸ் அடிச்சு... திருமணம் செஞ்சது சும்மா? அந்தர் பல்டியடித்த வனிதா.. காண்டான நெட்டிசன்ஸ்!

Published : May 02, 2023, 06:14 PM IST

2020 ஆம் ஆண்டு ஊருக்கே தெரியும் படி, பீட்டர் பாலை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து, திருமணமும் செய்து கொண்ட வனிதா விஜயகுமார்...  தற்போது தனக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணமே ஆகவில்லை என அறிவித்துள்ளது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.  

PREV
18
மோதிரம் மாற்றி லிப் கிஸ் அடிச்சு... திருமணம் செஞ்சது சும்மா? அந்தர் பல்டியடித்த வனிதா.. காண்டான நெட்டிசன்ஸ்!

விஜயகுமார் - மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், ஏற்கனவே இரண்டு முறை, திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில்... மூன்றாவதாக கடந்த 2020 ஆம் ஆண்டு, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார்.

28

இதைத்தொடர்ந்து, இவர்கள் இருவருக்கும் வனிதாவின் வீட்டில், கிறிஸ்தவ முறைப்படி மிகவும் எளிமையான முறையில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் பைபிள் போதித்து, மோதிரம் மாற்றி திருமணம் செய்து வைத்தார். வெள்ளை நிற கவுன் அணிந்த வனிதாவை அவரது இரு மகள்கள் தான் பெண் தோழிகளாய் மாறி அழைத்து வந்தனர். 

இறந்து போன வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் வீட்டில் கட்டு காட்டாக இருந்த பணம்? ஷாக்கிங் தகவல்!
 

38

திருமணம் முடிந்ததும், பீட்டர் பாலுக்கு லிப் டு லிப் கிஸ் அடித்து, காதலை வெளிப்படுத்தியது, மது அருந்தியது போன்ற புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டது. இவர்களின் திருமணம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் தன்னுடைய கணவர் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 

48

மேலும் தன்னை விவாகரத்து செய்யாமலேயே, வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாக குற்றம்சாட்டினார். இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, போன்ற பலர் எலிசபத்திற்கு ஆதரவு கரம் நீட்டினர். மேலும் வனிதாவுக்கு எதிராகவும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

250 பேருக்கு வீடு..! தல - தளபதியை ஓரங்கட்டிய விஜய் சேதுபதி! உதவுவதில் மனுஷன் கர்ணனா இருக்காரே..!
 

58

பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட புதிதில், தங்களின் காதலை யாராலும் பிரிக்க முடியாது, யார் என்ன வேண்டுமானாலும்செய்து கொள்ளட்டும் என வாய்சவடால் விட்டு வந்த வனிதா விஜயகுமார், திருமணம் ஆன ஒரு சில மாதங்களிலேயே பீட்டர் பாலின் குடிப்பழக்கத்தையும், புகை பழக்கத்தையும் கண்டு பீதியாகி, 6 மாதத்திற்கு முன்பே அவரை விட்டு பிரிந்தார். பின்னர் பீட்டர் பாலுடன் சேர வனிதா எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என கூறப்பட்டது.
 

68

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வனிதாவின் முன்னாள் கணவர் மரணம் என்றும், வனிதாவின் மூன்றாவது கணவர் என்றும் செய்திகள் வெளியாக்கின. இதற்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் விதமாக வனிதா விஜயகுமார், தன்னுடைய சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எந்த நடிகராலும் செய்யமுடியாத சாதனைகளை செய்தவர் அஜித்..! தல-யை ரசிகர்கள் கொண்டாடவும் இது தான் காரணம்!
 

78

அதில் கூறி உள்ளதாவது... "பீட்டர் பாலுக்கும், தனக்கும் திருமணமே ஆகவில்லை. சட்டப்படி பீட்டர் பால் என் கணவர் இல்லை. நான் அவருக்கு மனைவியும் இல்லை. நான் ஒரு சிங்கிள் வுமனாக இருந்து என் குழந்தைகளை வளர்த்து வருகிறேன். எனவே நான் யாருடைய இழப்புக்கும் வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது, என்னுடைய வாழ்க்கையை நான் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். எனவே, செய்திகளிலும், பத்திரிகைகளிலும், பீட்டர் பால் என் கணவர் என யாரும் செய்தி பரப்ப வேண்டாம் என கூற இதை கண்டு ரசிகர்களுக்கும், நெட்டிசன்களும் காண்டாகி உள்ளனர்.

88

மகள்கள் முன்பே திருமணம் என கூறி வெட்டிங் உடையில், லிப் டூ லிப் கிஸ் அடித்து கல்யாணம் பண்ணிக்கிட்டு... இன்னைக்கு அப்படியே அந்தர் பல்டி அடிக்கிறீங்களே என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுவும் எலிசபெத், பீட்டர் பாலை குடிகாரர் என கூறியபோது வனிதா கொஞ்சம் நஞ்சமா பேசினார். என்ன பண்றது... உண்மையை சொன்ன போது காதல் கண்ணை மறைச்சிது... அனுபவிக்கும் போது காதல் கசந்துடுச்சு.

அடுத்தடுத்து வர உள்ள ஏகே 62 படத்தின் 2 மாஸ் அப்டேட்டுகள்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் டிரீட்

click me!

Recommended Stories