வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் அண்மையில் ரிலீஸாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விடுதலை முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரிலீஸ் செய்யும் பணிகளில் பிசியாக உள்ளார் வெற்றிமாறன். அப்படத்திற்கான படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துவிட்டாலும், அதற்கான பேட்ச் ஒர்க் மற்றும் பின்னணி பணிகளை சில மாதங்கள் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.