பாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து தான் ஜவான் படத்தை எடுத்துள்ளாரா அட்லீ..?

Published : May 02, 2023, 03:31 PM ISTUpdated : May 02, 2023, 03:32 PM IST

தமிழில் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிவந்த இயக்குனர் அட்லீ, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை தற்போது இயக்கி வருகிறார்.

PREV
14
பாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து தான் ஜவான் படத்தை எடுத்துள்ளாரா அட்லீ..?

இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த ஆர்யாவின் ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து விஜய் உடன் கூட்டணி அமைத்த அட்லீ, அவரை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களைக் கொடுத்தார்.

24

விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த அட்லீக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஜவான். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள அட்லீ, அங்குள்ள உச்ச நட்சத்திரமான ஷாருக்கானை தான் அப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார். இதில் ஷாருக்கிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... என்னது கமல்ஹாசன் ஒரே நேரத்துல 6 ஹீரோயின்களை காதலிச்சாரா? - பிரபல நடிகை வெளியிட்ட ஷாக்கிங் தகவல்

34

ஜவான் படத்தை ஜூன் 2-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கடந்தாண்டே அறிவித்துவிட்டனர். ஆனால் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இதுவரை அப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாததால், ஜவான் படம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, ஜவான் படத்தின் கதை குறித்து பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. முதலில் இது விஜயகாந்தின் பேரரசு படக்கதை என்று கூறப்பட்டது.

44

ஆனால் தற்போது இது கமல்ஹாசன் - பாரதிராஜா கூட்டணியில் கடந்த 1985-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஒரு கைதியின் ரீமேக் படத்தின் கதையை தழுவி தான் அட்லீ ஜவான் படத்தின் கதையை அமைத்துள்ளதாகவும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப அதில் சில மாற்றங்களை செய்து இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. அட்லீ இதுவரை இயக்கிய அனைத்து படங்களிலுமே பழைய படங்களின் சாயல் இருக்கும், அதுபோல் ஜவானிலும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... ஒரு காட்சியில் கூட கேரளாவை தவறாக காட்டவில்லை... ‘தி கேரளா ஸ்டோரி’ நாயகி அடா ஷர்மா எக்ஸ்குளூசிவ் பேட்டி

Read more Photos on
click me!

Recommended Stories