அந்த வந்தியத்தேவனின் தீவிர ரசிகர்கள் தான் ஜப்பானில் இருந்து பறந்து வந்து சென்னையில் அவரை சந்தித்துள்ளனர். ஜப்பானை சேர்ந்த கார்த்தியின் ரசிகர்கள் சென்னையில் உள்ள மக்களுடன் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வேண்டும் என ஜப்பானில் இருந்து கிளம்பி வந்து, அப்படத்தை சென்னையில் 4 முறை பார்த்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த கார்த்தி, அந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.