மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், அதன் இரண்டாம் பாதி கடந்த ஏப்ரல் 28-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வந்தாலும், முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்தின் வசூல் இல்லை என்பது தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.