ஓஜி முதல் சக்தித் திருமகன் வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டி நிற்கும் படங்கள் & வெப் தொடர் லிஸ்ட்

Published : Oct 21, 2025, 11:04 AM IST

தீபாவளி முடிந்தாலும் ஓடிடியில் புதுப்படங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் அக்டோபர் 20 முதல் 25ந் தேதி வரை ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்க்கலாம்.

PREV
15
This week OTT releases

ஓடிடியில் இந்த வாரம் (அக். 21-25) வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் வெற்றி பெற்ற சில படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. அதுமட்டுமின்றி சில சூப்பர் ஹிட் வெப் தொடர்களும் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

25
ஓஜி

இந்த வார ஓடிடி வெளியீடுகளில் முக்கியமானது பவன் கல்யாணின் 'ஓஜி'. அதிரடி, ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட கேங்ஸ்டர் படமான இது நெட்ஃபிளிக்ஸில் வருகிற அக். 23ந் தேதி அன்று வெளியாகிறது. திரையரங்குகளில் பிளாக்பஸ்டர் ஆன இப்படம், ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.

35
சக்தித் திருமகன்

விஜய் ஆண்டனி நடித்த 'சக்தித் திருமகன்' திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் அக். 24ந் தேதி வெளியாகிறது. அருண் பிரபு இயக்கிய பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படம் திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், ஓடிடியிலும் ரசிகர்களைக் கவர வருகிறது. இப்படத்தை விஜய் ஆண்டனி தான் தயாரித்து இருந்தார்.

45
பிற மொழி படங்கள்

ஜான்வி கபூரின் 'பரம் சுந்தரி' பிரைம் வீடியோவில் அக். 24 அன்று வெளியாகிறது. மேலும், மலையாளப் படமான 'நடிகர்' லயன்ஸ்கேட் ப்ளேவில் அதே நாளில் வெளியாகிறது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'பிட்ச் டு கெட் ரிச்' என்ற ஃபேஷன் பிசினஸ் ரியாலிட்டி ஷோ ஜியோ ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீம் ஆகிறது. மேலும், மலையாளப் படமான 'சுட்டுலி' மனோரமா மேக்ஸில் அதே நாளில் வெளியாகிறது.

55
வெப் தொடர்கள்

மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட அனிமேஷன் தொடரான 'குருக்ஷேத்ரா: பகுதி 2' நெட்ஃபிளிக்ஸில் அக்டோபர் 24 முதல் ஒளிபரப்பாகிறது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் முழு AI தொழில்நுட்பத்தில் உருவான 'மகாபாரத்: ஏக் தர்மயுத்' தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் அக். 25 அன்று வெளியாகிறது. இந்தத் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories