செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள காந்தா திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
துல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கடந்த செப்டம்பர் மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் மற்றும் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா இணைந்து தயாரித்துள்ளன. துல்கர் சல்மான், ஜோம் வர்கீஸ், ராணா டகுபதி, மற்றும் பிரசாந்த் பொட்லூரி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
24
துல்கர் சல்மானின் காந்தா
'தி ஹன்ட் ஃபார் வீரப்பன்' என்ற நெட்ஃபிக்ஸ் வெப்தொடரை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் செல்வமணி செல்வராஜ் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இரண்டு பெரிய கலைஞர்களுக்கு இடையே நடக்கும் ஒரு பெரிய பிரச்சனையின் கதையை இப்படம் சொல்கிறது. காதல், ஈகோ, கலை, மற்றும் உணர்ச்சிகளின் வழியே இப்படம் பயணிக்கிறது.
34
காந்தா கதை என்ன?
ஃபர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை முன்னரே வெளியாகி, படத்தின் அப்டேட்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. 1950-களின் மெட்ராஸ் பின்னணியில் காந்தாவின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் பல சிறந்த படங்களைத் தயாரித்த வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் முதல் பிற மொழிப் படம் 'காந்தா' என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தயாரான இப்படம் மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தியிலும் வெளியாகும். பிளாக்பஸ்டர் தெலுங்குப் படமான 'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் படம் 'காந்தா'.
இந்த நிலையில். காந்தா திரைப்படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 14 அன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு டானி சான்செஸ் லோபஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜானு சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு லெவெலின் ஆண்டனி கோன்சால்வ்ஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். ஆர்ட் டைரக்டராக ராமலிங்கம் பணியாற்றி இருக்கிறார்.