நான் சாதியால் நசுக்கப்பட்டவன்..! அதை கடைசிவரை எதிர்ப்பேன்..! அத்துமீறும் மாரி செல்வராஜ்

Published : Oct 21, 2025, 09:48 AM IST

இங்கிருந்து கிளம்பி போன வலியும் வேதனையும் எனக்கு தெரியும். அதை மறந்துட்டு சாதாரணமா ஆடு, பாடுனா என்னால முடியாது. ஒவ்வொரு தனிமனிதனையும் திருப்திப்படுத்த முடியாது. இந்த நாட்டின் பிரஜை நான்.

PREV
14

அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் ‘பைசன்’ படம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மணத்தி கணேசனின் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் தங்கராஜுக்கு வீடு தேடி சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

24

‘‘மாரிசெல்வராஜ், ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் எல்லாம் முன்னேறிக்கொண்டு இருக்கும் ஒருசில சமூகத்தை சினிமா மூலம் பின்னோக்கிக கொண்டு சென்றுக்கொண்டு இருக்கிறார்கள். சமூக வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானவர்கள்’’ என பலரும் விமர்சித்து வரும் நிலையில் இதுகுறித்து பேசிய மாரிசெல்வராஜ். ‘‘மாரி செல்வராஜ் என்பவன் சாதியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர். நான் ஆணித்தரமாக சொல்கிறேன். மாரி செல்வராஜ் கடைசிவரை தொடர்ந்து சாதியை எதிர்ப்பான். தென் தமிழ்நாடு பற்றிய கதையை மாற்றுவதுதான் ‘பைசன்’ படத்தின் நோக்கம்.

34

தென் மாவட்டங்கள் ஏன் இப்படி இருக்குனு சென்னையில பேசுவாங்க.. அந்த அந்தக் கதையை மாத்தணும்னு தான் 'பைசன்' படம் எடுத்தேன்.. மணத்தி கணேசன் கதைக்குள்ள என் கதையும் இருக்கு. என் படங்களால் சாதிய மோதல்கள் ஏற்படும் என சொல்கிறார்கள். ஆனால் அப்படி எங்கேயாவது நடந்ததுண்டா? அப்படி எல்லாம் கிடையாது. இங்கிருந்து கிளம்பி போன வலியும் வேதனையும் எனக்கு தெரியும். அதை மறந்துட்டு சாதாரணமா ஆடு, பாடுனா என்னால முடியாது. ஒவ்வொரு தனிமனிதனையும் திருப்திப்படுத்த முடியாது. இந்த நாட்டின் பிரஜை நான்.

44

என்னை பாதித்த கதை, என் அப்பாவின் கதை, என் தாத்தாவின் கதையைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அதனை சாகும்வரை சொல்வேன். உங்கள் வாழ்க்கை வேறு, என் வாழ்க்கை வேறு. உங்கள் வாழ்க்கையை வைத்து, நீங்கள் என் வாழ்க்கையை பார்க்கக்கூடாது. எனக்கென்று ஒரு தனிப்பட்ட சுதந்திரம் உள்ளது. என் கதையையோ, என் அப்பாவின் கதையையோ, என் தாத்தாவின் கதையையோ சொல்ல எனக்கு உரிமை உள்ளது

மாரி செல்வராஜ் சாதிக்கு எதிரானவர் என்ற ஸ்டாம்ப் குத்தப்படும். அந்த ஸ்டாம்பை நான் வரவேற்கிறேன். மாரி செல்வராஜ் ஒருத்தன் உருவானதுக்கு காரணமே எனக்காக யாரும் பேசல அப்படிங்குறதுனால தான். திருப்பி திருப்பி எல்லா சுமையையும் எங்க மேல ஏத்தாதீங்க" எனத் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories