தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரம் நடித்த பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், பிரதீப் ரங்கநாதன், ஹரிஷ் கல்யாண் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இளம் ஹீரோக்கள் தீபாவளி ரேஸில் களமிறங்கினர். அதன்படி பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டியூட், விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான பைசன் காளமாடன். பிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த டீசல் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருந்தன. இந்த மூன்று படங்களும் தீபாவளி தினமான நேற்று எவ்வளவு வசூலித்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
பைசன் தீபாவளி வசூல்
துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த படம் பைசன் காளமாடன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் மணத்தி கணேசன் என்கிற கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இப்படம் தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5.42 கோடி வசூலித்து உள்ளது. நான்கு நாட்களில் உலகளவில் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடை போட்டு வருகிறது பைசன்.
34
டியூட் வசூல்
பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் தான் இந்த ஆண்டு தீபாவளிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகி இருந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கிய இப்படத்தில் சரத்குமார், மமிதா பைஜு ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூலில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.65 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. குறிப்பாக தீபாவளி தினமான நேற்று தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.8 கோடி வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது.
தீபாவளி ரேஸில் பரிதாப நிலையில் இருக்கும் படம் என்றால் அது டீசல் தான். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி இருந்தார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்திருந்தார். திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்த இப்படம் 4 நாட்களில் 5 கோடி கூட வசூலிக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படம் தீபாவளியன்று வெறும் ரூ.47 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. இதன்மூலம் இந்த தீபாவளிக்கு நமத்து போன பட்டாசு போல் ஆகி இருக்கிறது டீசல்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.