சிறகடிக்க ஆசை சீரியலில் அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தன்னுடைய கணவருக்காக மீனாவிடம் சீதா சண்டைபோட்டுள்ளார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் பைக்கில் வேகமாக வந்த இளைஞன் ஒரு பெண்ணை இடித்து தள்ளிவிட்டு தப்பிச் சென்ற நிலையில், அவரை துரத்தி சென்ற அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். ஏனெனில் அங்கு அடிபட்டுக் கிடந்த பெண்ணை கண்டுகொள்ளாமல், தப்பு செய்தவனை பிடிக்க சென்றிருந்தார். அதே வேளையில் அங்கு அடிபட்டு கிடந்த பெண்ணை காப்பாற்றிய முத்து ஹீரோவாகி பலரின் பாராட்டுக்களை பெறுகிறார். வேலை பறிபோனதைவிட, முத்துவுக்கு பாராட்டு கிடைப்பதை அருணால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் சீதாவிடம் முத்துவால் தான் இப்படி ஆனது என சொல்கிறார் அருண். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
24
மீனா - சீதா இடையே வெடித்த மோதல்
இதையடுத்து தன்னுடைய அம்மா வீட்டுக்கு வரும் சீதா, அங்கு இருந்த மீனாவிடம் சண்டைபோடுகிறார். அருண் சஸ்பெண்ட் ஆனது மாமாவால் தான். என் புருஷனைப் பற்றி சோசியல் மீடியாவில் தப்பா பரப்பி விட்ருக்காங்க என சீதா சொல்ல, அதற்கு பதிலடி கொடுத்த மீனா, முத்துவுக்கு அந்த நேரத்துல அந்த பெண்ணோட உயிர் தான் பெருசா தெரிஞ்சிருக்கு, இதுல உன் புருஷனை எப்படி கேவலப்படுத்தலாம்னு அவர் சத்தியமா நினைக்கவே இல்லை. அந்த மாதிரி ஆளும் அவர் கிடையாது. அதனால் மன்னிப்பு கேட்க ம் முடியாது என கறாராக சொல்லிவிடுகிறார். மாமா வேணும்னு தான் பண்ணிருக்காரு அவரு மன்னிப்பு கேட்கணும் என சீதா சீறுகிறார்.
34
மன்னிப்பு கேட்க முடியாது
இதையடுத்து பேசும் மீனா, அவரே இதற்கு ஒத்துக்கிட்டாலும் நான் மன்னிப்பு கேட்க விடமாட்டேன் என கூறுகிறார். மாமா அருண் கிட்ட மன்னிப்பு கேட்டா தான் நான் உன்கிட்ட பேசுவேன். இல்லேனா இனிமே உன்கிட்ட பேசவே மாட்டேன் என சொல்லிவிடுகிறார் சீதா. உணர்ச்சிவசப்பட்டு பேசாத சீதா என மீனா சொல்ல, இதனால் டென்ஷன் ஆகும் சீதா, ஒரு மன்னிப்பு கேக்குறதுல என்ன ஆகிவிடப்போகுது. இவ்வளவு பிரச்சனைக்கு காரணமா இருந்துட்டு ஒரு மன்னிப்பு கூட கேட்க முடியாதா என கத்துகிறார். நான் மறுபடியும் சொல்றேன் என் புருஷன் மேல தப்பு இருந்தா, நானே உன் வீடு தேடி அவரை கூட்டிட்டு வந்து அருண்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லிருப்பேன். இந்த விஷயத்தில் என் புருஷன் மேல எந்த தப்பும் இல்ல. அவர் பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க சொல்ல முடியாது என திட்டவட்டமாக கூறிவிடுகிறார் மீனா.
இதையடுத்து பேசும் சீதா, சஸ்பெண்ட் ஆகியிருக்குறது என் புருஷன் தான். அவர் அதையே நினைச்சுகிட்டு, சாப்பிடாமா, வீட்டை விட்டு எங்கேயும் போகாம இருக்காரு. இவ்வளவுக்கும் காரணமாக இருந்துட்டு ஒரு மன்னிப்பு கேட்க சொன்னா, நீ உன் புருஷன விட்டுக்கொடுக்காம பேசுற, அப்போ நான் மட்டும் என் புருஷனை விட்டுக் கொடுக்கணுமா என கூறிவிட்டு கோபத்துடன் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் சீதா. மீனாவுடன் தன்னுடைய மனைவி சண்டை போட்ட விஷயம் அறிந்து அருணும் செம ஹாப்பி ஆகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.