
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமரவேல் மற்றும் அரசியின் லவ் ஸ்டோரி பற்றி அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அதன் பிறகு தனது அப்பாவை அசிங்கப்படுத்த வேண்டி குமரவேல் தன்னை காதலிப்பது போன்று ஏமாற்றியது அறிந்து அரசி அவரிடமிருந்து விலகினார். அதன் பின்னர், அரசியை கடத்தியது, பிறகு அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேல் வீட்டிற்கு சென்று மனைவியாக நடித்து பின்னர் எல்லா உண்மையும் தெரிந்து பாண்டியன் தனது வீட்டிற்கு அரசியை கூட்டிச் சென்றது.
இதைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்ற வழக்கு என்று அரசி மற்றும் குமரவேலுவிற்கு இடையில் பல சம்பவங்கள் நடந்தது. இறுதியாக அரசி தனது வழக்கை திரும்ப பெற்றார். மேலும், அரசியின் காலில் குமரவேல் விழுந்தது தான் பெரிய டர்னிங் பாய்ண்டாக இருந்தது. எப்போது அரசியை வெறுக்க ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்து அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார். இதைப் பற்றி குமரவேல் காந்திமதியிடமும் கூறியிருக்கிறார்.
அரசிக்கு மீண்டும் திருமணம் பற்றி பேச்சு எழுந்த நிலையில், அதில் தனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறியது குமரவேலுவிற்கு சாதகமாக அமைந்தது. இந்த நிலையில் தான் இப்போது காந்திமதியின் 75ஆவது பவளவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் காந்திமதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
இந்த வாரம் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பதற்கான புரோமோ வீடியோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டது. அதன்படி, இந்த புரோமோவில் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளை பாண்டியனின் குடும்பமும், முத்துவேல் குடும்பமும் ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்துள்ளது. ஆம், இந்த பிறந்தநாளுக்கு கோமதி தனது கணவர், மகன், மகள், மருமகள்கள் என்று அனைவருடனும் வந்திருந்து அம்மாவை மகிழ்வித்துள்ளார். அம்மாவின் ஆசைக்கிணங்கள் முத்துவேலுவும் எந்தவித பிரச்சனையும் செய்யாமல் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
புரோமோவின் ஆரம்பம் முதலே பேனர் தான், ஆட்டம் தான், பாட்டம் தான். ஒரே ஜாலியாக இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகிறது. ஒரு பக்கம் முத்துவேல் குடும்பத்தினருக்கான பேனர் இருக்க, இன்னொரு பக்கம் பாண்டியன் குடும்பத்தாருக்கான பேனர் வைக்கப்பட்டுள்ளது. பாண்டியனின் 3 மகன்களும் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளனர்.
ஆத்தாவுக்கு தங்க வளையல் போட்டு அழகு பார்த்த மகள் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
முத்துவேல் தனது அம்மாவிற்கு தங்க செயின் பரிசளிக்க, கோமதி தனது அம்மாவிற்காக தங்க வளையல் பரிசாக அளித்தார். கதிர் அம்மாச்சி மற்றும் தாத்தாவின் புகைப்படம் இருக்கும் போட்டோவை பரிசாக கொடுத்து பாட்டியை அசத்தினார். இதைத் தொடர்ந்து கோமதியின் குடும்பத்தார் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் சரவணன், தங்கமயில், செந்தில், மீனா, கதிர், ராஜீ, கோமதி, பாண்டியன், அரசி, குழலி மற்றும் அவரது கணவர், பழனிவேல் மற்றும் சுகன்யா என்று ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதே போன்று முத்துவேல், சக்திவேல், மாரி, வடிவு, குமரவேல் என்று அவர்களும் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடைசியாக இருவீட்டார் குடும்பமும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதோடு புரோமோ வீடியோவும் முடிந்தது. எனினும், இந்த புரோமோ வீடியோ கோமதியும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கிறார். எந்த சண்டையும், பிரச்சனையும் வேண்டாம் என்று கோமதி கேட்டுக் கொண்டார்.
ராஷ்மிகாவின் தம்மா படத்தை பார்ப்பதற்கான 7 முக்கியமான காரணங்கள்!
ஆனால், சக்திவேல் அசைவ உணவு ஏற்பாடு செய்திருந்த நிலையில் பாண்டியன் குடும்பத்தினர் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததாக கடந்த வாரம் பேச்சு அடிபட்டது. எனினும், அதில் ஏதேனும் பிரச்சனை வருகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதில் ஒரு முக்கியமான டுவிஸ்ட் இருப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தனது பிறந்தநாளை முன்னிட்டு அரசியை தனது பேரனுக்கு மணமுடித்து கொடுக்க காந்திமதி தனது மருமகன் பாண்டியனிடம் கேட்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இதை தனது கடைசி ஆசையாக கூட காந்திமதி கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை மகள் கோமதியிடம் கேட்காமல் மருமகன் பாண்டியனிடம் கேட்பார் என்று தெரிகிறது. இதற்கு சக்திவேல் மற்றும் முத்துவேல் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.