Gomathi wearing a gold bracelet : காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளில் அவரது மகள் கோமதி தங்க வளையல் போட்டுவிட்டு அழகு பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி குடும்பத்தோடு ஆத்தாவின் பிறந்தநாளிலும் கலந்து கொண்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 2ஆவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 600 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரிரு வாரங்களில் 2 வருடங்களை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த வாரம் முழுவதும் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளுக்கான கொண்டாட்டம் பற்றிய பேச்சுகள் நடந்தது.
27
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
இந்த நிலையில் இனி இந்த வாரம் அதற்கான வேலைகள் நடந்து காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த வாரம் அதாவது நாளை 20ஆம் தேதி தீபாவளி என்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பு இல்லை. ஆனாள், நாளை மறுநாள் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பதற்கான புரோமோ வீடியோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டது.
37
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ வீடியோ
அதன்படி, இந்த புரோமோவில் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளை பாண்டியனின் குடும்பமும், முத்துவேல் குடும்பமும் ஒன்றாக கொண்டாடி மகிழ்ந்துள்ளது. ஆம், இந்த பிறந்தநாளுக்கு கோமதி தனது கணவர், மகன், மகள், மருமகள்கள் என்று அனைவருடனும் வந்திருந்து அம்மாவை மகிழ்வித்துள்ளார். அம்மாவின் ஆசைக்கிணங்கள் முத்துவேலுவும் எந்தவித பிரச்சனையும் செய்யாமல் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
47
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
புரோமோவின் ஆரம்பம் முதலே பேனர் தான், ஆட்டம் தான், பாட்டம் தான். ஒரே ஜாலியாக இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகிறது. ஒரு பக்கம் முத்துவேல் குடும்பத்தினருக்கான பேனர் இருக்க, இன்னொரு பக்கம் பாண்டியன் குடும்பத்தாருக்கான பேனர் வைக்கப்பட்டுள்ளது. பாண்டியனின் 3 மகன்களும் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளனர்.
57
விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
முத்துவேல் தனது அம்மாவிற்கு தங்க செயின் பரிசளிக்க, கோமதி தனது அம்மாவிற்காக தங்க வளையல் பரிசாக அளித்தார். கதிர் அம்மாச்சி மற்றும் தாத்தாவின் புகைப்படம் இருக்கும் போட்டோவை பரிசாக கொடுத்து பாட்டியை அசத்தினார். இதைத் தொடர்ந்து கோமதியின் குடும்பத்தார் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில் சரவணன், தங்கமயில், செந்தில், மீனா, கதிர், ராஜீ, கோமதி, பாண்டியன், அரசி, குழலி மற்றும் அவரது கணவர், பழனிவேல் மற்றும் சுகன்யா என்று ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதே போன்று முத்துவேல், சக்திவேல், மாரி, வடிவு, குமரவேல் என்று அவர்களும் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடைசியாக இருவீட்டார் குடும்பமும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதோடு புரோமோ வீடியோவும் முடிந்தது. எனினும், இந்த புரோமோ வீடியோ கோமதியும் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கிறார். எந்த சண்டையும், பிரச்சனையும் வேண்டாம் என்று கோமதி கேட்டுக் கொண்டார்.
77
காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள்
ஆனால், சக்திவேல் அசைவ உணவு ஏற்பாடு செய்திருந்த நிலையில் பாண்டியன் குடும்பத்தினர் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததாக கடந்த வாரம் பேச்சு அடிபட்டது. எனினும், அதில் ஏதேனும் பிரச்சனை வருகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதில் ஒரு முக்கியமான டுவிஸ்ட் இருப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. தனது பிறந்தநாளை முன்னிட்டு அரசியை தனது பேரனுக்கு மணமுடித்து கொடுக்க காந்திமதி தனது மருமகன் பாண்டியனிடம் கேட்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.