தீபாவளி எல்லாம் கொண்டாடிவிட்டு ஹிட் சீரியலிலிருந்து விலகிய நடிகை; என்ன காரணம் தெரியுமா?

Published : Oct 19, 2025, 10:00 AM IST

Sunitha Srinivasan Quits From Anna Serial : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலிலிருந்து நடிகை ஒருவர் விலகியுள்ளார். அந்த நடிகை யார் என்ன காரணம் என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
14
ஜீ தமிழ் அண்ணா சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நினைத்தாலே இனிக்கும், மாரி, கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், வீரா, மௌனம் பேசியதே, கெட்டிமேளம் என்று பல சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒன்று தான் அண்ணா. இயக்குநர் துர்கா சரவணன் இயக்கத்தில் அண்ணன் மற்றும் தங்கை பாசத்தை மையப்படுத்தி குடும்பக் கதையோடு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

காந்தாரா 1 வெற்றிக்கு பிறகு வாரணாசியில் வேண்டுதலை நிறைவேற்றிய ரிஷப் ஷெட்டி!

24
அண்ணா சீரியல்

கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் எபிசோடு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரையில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது 2 வருடங்களை கடந்து அண்ணா சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் செந்தில் குமார் (சண்முகம்), நித்யா ராம் (பரணி), மஞ்சுளா ரெட்டி (சூடாமணி), சுனிதா (ரத்னா அறிவழகன்), விகாஸ் சம்பத் (அறிவழகன்), பிரீதா சுரேஷ் (இசக்கி முத்துப்பாண்டி), சத்யா எஸ்கே (முத்துப்பாண்டி), அபினாஷ் (சிவபாலன்) என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

34
சுனிதா ஸ்ரீனிவாசன் அண்ணா சீரியல்

இந்த சீரியலில் சண்முகத்தின் முதல் தங்கையாக நடித்து வருபவர் தான் சுனிதா. இவர் ரத்னா அறிவழகன் என்ற ரோலில் இந்த சீரியலில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் இப்போது தான் சிறையிலிருந்து வெளியில் வந்த நிலையில் கொஞ்சம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா சீரியலில் தீபாவளி பண்டிகை எல்லாம் கொண்டாடப்பட்டது. இதில், பட்டாசு வெடித்தும், முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்கள் சாப்பிட்டும், கணவன் மனைவிகள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டும் ரொம்பவே ஜாலியாகவே தீபாவளி பண்டிகை கொண்டாட்டினர்.

காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

44
சுனிதா ஸ்ரீனிவாசன் இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் தான் சுனிதான் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ஹாய் என் இன்ஸ்டாகிராம் நண்பர்களே! சில தனிப்பட்ட காரணங்களுக்காக நான் அண்ணா சீரியலிலிருந்து விலகுகிறேன். நான் இனிமேல் ரத்னாவாக தொடரவில்லை. இந்த அழகான பயணத்தில் ரத்னா கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. 

படப்பிடிப்பு தளத்தில் உங்கள் எல்லோரையும் நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். ரத்னாவாக நடிக்க வருபவருக்கு எனது வாழ்த்துகள். அன்பு காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். சுனிதா ஸ்ரீனிவாசன் விலகியதைத் தொடர்ந்து ரத்னாவாக நடிக்க வரும் நடிகை குறித்து இதுவரையில் அறிவிப்பு வரவில்லை. ரத்னாவாக நடிக்கும் அந்த நடிகை யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories