பழைய பகையை தீர்க்க சென்ற ஆதி குணசேகரன்; அடுத்த அதிரடிக்கு தயாரான ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Oct 18, 2025, 11:34 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தி மற்றும் ஜனனி கையில் லெட்டர் சிக்கியதால் உஷார் ஆன ஆதி குணசேகரன் பழைய பகையை தீர்க்க இராமேஸ்வரத்திற்கு கிளம்பி சென்றிருக்கிறார்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு முன் வந்த லெட்டரை சக்தி எடுத்த நிலையில், இந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவருகிறது. இதனால் ஆதி குணசேகரன் ஏதோ ஒரு பெண்ணிற்கு துரோகம் செய்திருக்கிறார் என்பதை மட்டும் யூகிக்கும் அவர்கள், அது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என முனைப்பு காட்டுகின்றனர். இதனால் சக்தி மற்றும் ஜனனி இருவரும் இராமேஸ்வரம் கிளம்பிச் செல்ல முடிவெடுத்து உள்ளனர். ஆனால் அவர்களுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன் அந்த பழைய பகையை தீர்க்க சென்றிருக்கிறார்.

24
ஆதி குணசேகரனை துரத்தும் பகை

யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்ற குணசேகரன், பின்னர் போன் போட்டு கதிரிடம், தான் எதற்காக வீட்டை விட்டு வெளியேறினேன் என்கிற தகவலை சொல்கிறார். மேலும் தான் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் அவர்களிடம் இருக்கும் விஷயத்தையும் போட்டுடைக்கிறார். இதையடுத்து தன் அண்ணனுக்காக சக்தியிடம் இருக்கும் ஆதாரத்தை திருட பிளான் போடும் கதிர், அதற்காக கரிகாலனை இரவில் சக்தியின் ரூமுக்கு அனுப்புகிறார். அவரும் அங்கு சென்று ஏதேனும் சிக்குகிறதா என்பதை தேடிப் பார்க்க, அப்போது அவனை சக்தி கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தார்.

34
தல தீபாவளிக்கு ஆயத்தமாகும் தர்ஷன் - பார்கவி

அந்த பிளான் சொதப்பியதால் அடுத்து என்ன செய்வது என கதிர் குழம்பிப் போய் இருக்க, ஜனனி, நந்தினி, ரேணுகா ஆகியோர் தாங்கள் தர்ஷனுக்கு தல தீபாவளி கொண்டாட இருக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். அதற்கு விசாலாட்சி எதிர்ப்பு தெரிவிக்க, நீங்க என்ன செஞ்சாலும் நாங்க கொண்டாடுவோம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க என சொல்கிறார் நந்தினி. இதையடுத்து ஹாலில் கதிர், ஞானம் ஆகியோர் அமர்ந்திருக்கும்போது பார்கவிக்கு ஒரு கொரியர் வந்திருப்பதாக ஒருவர் வந்து கொடுக்கிறார். அதற்கு அவர்கள், அப்படியெல்லாம் இந்த வீட்டில் யாருமே இல்லை என சொல்கிறார்கள்.

44
ஜீவானந்தம் அனுப்பிய கிஃப்ட்

பின்னர் அந்த பார்சலை சக்தி வாங்கி பார்கவியிடம் கொடுக்கிறார். அப்போது அதை திறந்து பார்த்த பின்னர் தான் அது ஜீவானந்தம் தனது தல தீபாவளிக்காக அனுப்பிய பார்சல் என்பது பார்கவிக்கு தெரியவருகிறது. உடனே அவருக்கு போன் போட்டு பேசும் பார்கவி, அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, தானும் அங்கு வந்து வென்பா கூட இருக்க ஆசைப்படுவதாக கூறுகிறார். அதற்கு ஜீவானந்தம், இது உனக்கு தல தீபாவளி, நீ வீட்டில் தான் கொண்டாட வேண்டும் என அட்வைஸ் பண்ணுகிறார். இதையடுத்து என்ன நடந்தது? தர்ஷனும் பார்கவியும் தல தீபாவளி கொண்டாடினார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories