அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைத் தான் பெற்றிருந்தது. இந்த படத்திற்காக எச்.வினோத் மற்றும் போனி கபூருடன் கூட்டணி அமைத்திருந்தார் அஜித். இந்த இரண்டு படங்களுமே போதுமான வெற்றியை பெறாவிட்டாலும், மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார் அஜித். இந்த படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.