அவ ஒரு சைக்கோ சார்...ஆதாரங்களை அள்ளி வீசும் சீரியல் நடிகையின் கணவர்

First Published | Oct 8, 2022, 8:36 AM IST

திவ்யா ஸ்ரீதர் சைக்கோ அதனால் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் எனவும் பகிரங்கமாக பரபரப்பை கிளப்பி உள்ளார்.

Divya Shridhar

சினிமாக்களை விட சீரியல்களில் தான் ரொமான்ஸ் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக ஒரே சீரியலில் நடிக்கும் ரீல் ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் சமீப காலமாகவே பெருகிவிட்டது.  அவ்வாறு திருமணம் செய்து கொண்டவர்கள் தான் திவ்யா மற்றும் அர்னவ். பொதுவாக தங்களது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வரும் சீரியல் பிரபலங்களுக்கு மத்தியில் இவர்கள் பல ஆண்டுகளாக தங்களது திருமணம் குறித்த ரகசியத்தை மறைத்தே வைத்திருந்தனர்.

Divya Shridhar

சன் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த கேளடி கண்மணி என்னும் சீரியலில் நடித்தவர்கள் தான் திவ்யா ஸ்ரீதர் மற்றும் ஆர்னவ்.  இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக முன்னதாக சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அவை விளம்பரத்திற்காக எடுத்த படங்கள் என இருவருமே மறுப்பு தெரிவித்திருந்தனர். 

மேலும் செய்திகளுக்கு...மாடலுடன் டேட்டிங்..உண்மையை உடைத்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்


Divya Shridhar

பின்னர் சமீபத்தில் தங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், புதுவரவை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தனது கர்ப்பம் குறித்த தகவலை திவ்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். அதோடு கணவரை வெகுவாக புகழ்ந்து தள்ளினார். தற்போது  திவ்யா ஸ்ரீதர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார்.

Divya Shridhar

இந்நிலையில்  தங்களது திருமணம் குறித்த செய்தியை கூறிய சில வாரங்களிலேயே திடீர் பூகம்பத்தையும் கிழப்பியுள்ளார் திவ்யா. சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில்  தன்னந்தனியாக அனுமதியாகி உள்ள இவர் தனது கருவை கலைக்க அர்னவ் முயற்சிப்பதாகவும், தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும் போலீசில் புகார் கொடுத்தார்.

மேலும் செய்திகளுக்கு...இது அவ்ளோ ஈசி இல்ல..ஆலோசனை மைய திறப்பு விழாவில் நடிகை சாய் பல்லவி உருக்கம்

Divya Shridhar

இது குறித்து பேட்டியளித்த அர்னவ்,  மூன்று மாத கருவை கலைப்பதற்காக திவ்யா ஸ்ரீதர் நாடகமாடுவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில்  திவ்யா ஸ்ரீதருக்கு எதிரான பல ஆதாரங்களை தனியார் இணையதளம் மூலம் வெளியிட்டுள்ளார் அர்னவ். நான் அடிக்கவில்லை. என்னதான் அடித்தார்கள் என ஆதாரமாக காயங்களுடன் இருக்கும் புகைப்படங்கள், திவ்யா ஸ்ரீதர் தனது தாலியை கழட்டி வைத்து அர்னவ் தனக்கு வேண்டாம் என கைப்பட எழுதிய கடிதம் , திவ்யாவிற்கு சைக்கோ ட்ரீட்மெண்ட் எடுத்ததற்கான ஆதாரம் என பலவற்றை காட்டியுள்ளார். அதோடு திவ்யா ஸ்ரீதர் சைக்கோ அதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் எனவும் பகிரங்கமாக பரபரப்பை கிளப்பி உள்ளார்.

Latest Videos

click me!