மாடலுடன் டேட்டிங்..உண்மையை உடைத்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்

Published : Oct 08, 2022, 08:07 AM ISTUpdated : Oct 08, 2022, 03:30 PM IST

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் மாடலுடன் டேட்டிங் செய்த உண்மையை உடைத்துள்ளார்....

PREV
14
மாடலுடன் டேட்டிங்..உண்மையை உடைத்த நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்
kalidas jayaram

பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், இவரும் மலையாள திரையுலர்கள் மிகப் பிரபலமாகவே இருந்து வருகிறார். தனது ஏழு வயதில் மலையாள திரைப்படமான கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியதிரைப்பட விருது வரை பல விருதுகளை வென்றுள்ளார்.

24
kalidass

2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண் பானையும் என்ற தமிழ் திரைப்படம் மூலம் இங்கு அறிமுகமானார். தொடர்ந்து பூமரம் என்னும் படத்தின் மூலம் மீண்டும் மலையாள படத்திற்கு திரும்பினார். சென்னையை  பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது தந்தையை போலவே மிமிக்கிரி செய்வதில் சிறந்து விளங்குகிறார். மேலும்  சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருப்பார். சில காட்சிகளில் மட்டும் தோன்றி இருந்தாலும் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன பக்கம் ஈர்த்து விட்டார் என பாராட்டப்பட்டார் காளிதாஸ்.

மேலும் செய்திகளுக்கு...இது அவ்ளோ ஈசி இல்ல..ஆலோசனை மைய திறப்பு விழாவில் நடிகை சாய் பல்லவி உருக்கம்

34
Kalidas Jayaram

அதோடு சமீபத்தில் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடித்திருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த படத்தில் துஷாரா விஜயன் முக்கிய ரோலில் தோன்றியிருந்தார். இந்த படத்திற்காக காளிதாஸ் ஜெயராம் வெகுவாக பாராட்டப்பட்டார். வெப் சீரியஸான பாவகதைகளிலும் காளிதாஸ் தோன்றியிருந்தார். இதற்கிடையே சோசியல் மீடியாவிலும் பிஸியாக இருக்கும் காளிதாஸ் ஜெயராம் அவ்வப்போது தனது பெற்றோர்களுடன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

44
Kalidas Jayaram

இந்நிலையில் தனது குடும்பம் அல்லாமல் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். இதனால் பல கேள்விகள் சமூக வலைதளத்தில் ஏழுந்தது. அவர் பெயர் தாரணி காளிங்கராயர். 2019 மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர். அவருடன் டேட்டிங் செய்வதை காளிதாஸ் ஜெயராம் உறுதி செய்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார் காளிதாஸ் ஜெயராம்.

மேலும் செய்திகளுக்கு...ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை பத்மபிரியா

Read more Photos on
click me!

Recommended Stories