இதனிடையே தற்போது மேலும் ஒரு நடிகையின் பிரச்சனையிலும் ஈஸ்வரின் பெயர் அடிபடுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ்வை கேளடி கண்மணி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டார். இவர் தற்போது கர்ப்பமாகவும் உள்ளார். நேற்று திடீரென அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்ட திவ்யா, அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் தனது வயிற்றில் உள்ள கரு கலைந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.