90களில் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற சாக்லேட் பாய் என்றால் அவர் அரவிந்த்சாமி தான் இளம் பெண்களை தன் நடிப்பால் ஈர்த்து வைத்திருந்த இவர், பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி, பின்னர் ரோஜா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முன்னணி நடிகராக மாறிவிட்டார். தொடர்ந்து பாம்பே, தாலாட்டு, டூயட் , மின்சார கனவு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார்.