தன்னை விட 4 வயது அதிகமான 'வானத்தை போல' சீரியல் நடிகையை காதலிக்கும் பசங்க பட குழந்தை நட்சத்திரம் கிஷோர்!

First Published | Dec 27, 2022, 9:23 PM IST

'பசங்க' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்ற நடிகர் கிஷோர் தற்போது தன்னுடைய காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.
 

1994 ஆம் ஆண்டு பிறந்த கிஷோர், திருச்சிராப்பள்ளியை பூர்வீகமாக கொண்டவர். இவருடைய தந்தையின் தொழில் காரணமாக, இவரது குடும்பம் சென்னைக்கு மாறுதலாகி வசித்து வருகின்றனர். சென்னையிலேயே தன்னுடைய ஸ்கூல் படிப்பை முடித்த கிஷோர், பின்னர் தனியார் கல்லூரியில் பிடெக் சேர்ந்தார்.

ஆனால் நடிப்பின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக, தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு முழுமையாக திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆதவன் தொட்டு தழுவ... குட்டை டவுசரில்... டீப் நெக் டாப் அணிந்து முரட்டு கவர்ச்சி காட்டிய பூனம் பாஜ்வா!

Tap to resize

கிஷோர், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்,கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'பசங்க' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 

மேலும் தன்னுடைய முதல் படத்திலேயே, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Ponniyin Selvan Look Out:'பொன்னியின் செல்வன்' புதிய லுக் அவுட் நாளை வெளியாகிறது..!

'பசங்க' படத்தை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி , கோலி சோடா,  போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 'சகா', 'ஆறு அத்தியாயம்', 'ஹவுஸ் ஓனர்', 'கம்பன் கழகம்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். மேலும் 'வரமாட்டியா' போன்ற ஆல்பம் பாடலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திருமண வயதை எட்டியுள்ள கிஷோர், தன்னுடைய காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். இவர் காதலிப்பது வேறு யாரையும் அல்ல, நடிகை, மாடல், மற்றும் தொகுப்பாளர் என பல்வேறு திறமைகளோடு விளங்கும் ப்ரீத்தி குமார் தான்.

இவர் தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'தமிழ் செல்வி' என்கிற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், சீரியல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.

லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம் மறப்பதில்லை, பிரியமானவள், சுந்தரி நீயும் சுந்தரி நானும், மற்றும் வானத்தப்போல போன்ற சீரியல்களில் நடித்துள்ள இவருக்கு 32 வயதாகுகிறது. கிஷோரை விட நான்கு வயது மூத்தவரான ப்ரீத்தியை தான் காதலிப்பதாக அறிவித்துள்ளார். 

விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!