மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த வாரம் நுரையீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். 48வயதான மீனாவின் கணவர் கடந்த ஜனவரியில் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பதிவு செய்திருந்த மீனா மொத்த குடும்பமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், தனது கணவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.