BIGG BOSS: பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் போட்டியாளர் குக் வித் கோமாளி ரக்‌ஷனா..? அட...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.?

First Published Jul 3, 2022, 12:22 PM IST

Cook with Comali Rakshan: விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வரும் ரக்‌ஷன் தான் பிக்பாஸ் சீசன் 6-ல், முதல் ஆளாக நுழையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

BIGGBOSS

பிக் பிரதர் நிகழ்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் டிவியில், கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளன. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி,  தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது. 

BIGGBOSS

இந்த நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்கள் முதல் யூட்யூப் பிரபலங்கள், மாடல் வரை பல்வேறு போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டனர். முதல் பாகத்தில் ஆரவ் ,இரண்டாம் பாகத்தின் ரித்விகா, மூன்றாம் பாகத்தில் முகன் ராவ், நான்காம் பாகத்தில் ஆரி அர்ஜுன், 5 வது சீசனில் ராஜு ஜெயமோகன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.  குறுகிய காலத்திலேயே மமக்களிடையே அதிக வரவேற்பை பெற்று தந்த நிகழ்ச்சியில் இதுவும் ஒன்றாகும். 

மேலும் படிக்க....Aishwarya: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓப்பனாக சொன்ன ஹெல்த் சீக்ரெட்...இதெல்லாம் ட்ரை பண்ணுங்கோ..அப்பறம் பாருங்க

BIGGBOSS

இதையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி  டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்ற ஓடிடிக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து  விக்ரம் பட ஷுட்டிங் காரணமாக அவர் விலகியதையடுத்து, சில வாரம் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார். இதில், கடந்த 5 சீசன்களில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதில், பாலாஜி முருகதாஸ் வெற்றி பெற்றார். அவருக்கு டிராபி உடன் 35 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க....Aishwarya: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓப்பனாக சொன்ன ஹெல்த் சீக்ரெட்...இதெல்லாம் ட்ரை பண்ணுங்கோ..அப்பறம் பாருங்க

இந்நிலையில், விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வரும் ரக்‌ஷன் தான் பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் ஆளாக நுழையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

BIGGBOSS

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த ரக்‌ஷன் கடந்த பிக்பாஸ் சீசன்-5 கலந்து கொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் 6-ல் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். மேலும், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டு வருகிறதாம், இதையடுத்து சீசன் வழக்கம் போல் அக்டோபர் மாதன் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க....Aishwarya: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓப்பனாக சொன்ன ஹெல்த் சீக்ரெட்...இதெல்லாம் ட்ரை பண்ணுங்கோ..அப்பறம் பாருங்க

click me!