இந்நிலையில், நடிகை அமலாபால் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்துகொள்ள என்ன தகுதி வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமலாபால், “உண்மையா சொல்லனும்னா நான் இன்னும் அதை கண்டுபிடிக்கவில்லை. தற்போது நான் சுய புரிதலுக்கான பயணத்தில் உள்ளேன். நான் கண்டுபிடித்தபின் உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன்” என கூறியுள்ளார்.