தெலுங்கு நடிகையான அனுஷ்கா, கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ரெண்டு படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் அவருக்கு சரிவர அமையாததால் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் டோலிவுட் பக்கம் சென்ற அனுஷ்கா அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இந்நிலையில், நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் ஆகாததற்கான காரணம் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 40 வயதைக் கடந்தபோதிலும் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் ஆகாமல் இருப்பதற்கு அவரது உடல் எடை அதிகமானதுதான் காரணம் என அவர் கூறி உள்ளார். அனுஷ்கவின் உடல் எடையை பார்த்து தான் அவரை யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வராமல் இருக்கிறார்கள் என்றும் அவர் பேசி உள்ளார்.