திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமையாததற்கு இவர்தான் காரணம் - பிரபல பாலிவுட் இயக்குனர் மீது பழிபோட்ட சமந்தா

First Published | Jul 3, 2022, 8:59 AM IST

Samantha : இந்தியில் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமந்தா, அதில் விவாகரத்து குறித்து பேசி உள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. கடந்த ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையும் படியுங்கள்... SAC வாழ்வில் முக்கியமான நாள்... கேக் வெட்டி கொண்டாடிய விஜய்யின் தந்தை - தளபதி மட்டும் மிஸ்சிங்

விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தாவின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதனை தக்க வைத்துக் கொள்ள அவர் கிளாமர் வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதன் காரணமாக நடிகை சமந்தாவுக்கு பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. விரைவில் அவர் கரண் ஜோகர் இயக்கும் படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கிளாமரா போட்டோஷூட் நடத்துனது இதுக்குத்தானா..! பிரம்மாண்ட வாய்ப்பை தட்டித்தூக்கிய ரச்சிதா- வாழ்த்தும் ரசிகர்கள்

Tap to resize

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்த பின்னர், அந்த பிரிவுக்கான காரணம் குறித்தோ, விவாகரத்து செய்தது குறித்தோ எந்தவித பேட்டியும் கொடுக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், இந்தியில் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சமந்தா, அதில் விவாகரத்து குறித்து பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Vishal : முன்னாள் முதல்வரை எதிர்த்து போட்டி... அரசியலில் குதிக்கிறாரா நடிகர் விஷால்?... அவரே சொன்ன நச் பதில்

இந்நிகழ்ச்சியின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடிகை சமந்தா, திருமண வாழ்க்கை சந்தோஷமில்லாமல் அமைவதற்கு நீங்கள் தான் காரணம் என அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், பிரபல பாலிவுட் இயக்குனருமான கரண் ஜோகரை பார்த்து கூறுகிறார். ஏனென்றால் நீங்கள் தான் K3G படத்தில் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என காட்டியுள்ளீர்கள். ஆனால் உண்மையில் அது கே.ஜி.எஃப் படம் போன்று பல பிரச்சனைகள் நிறைந்தது என கூறி உள்ளார் சமந்தா. இந்நிகழ்ச்சி வருகிற ஜூலை 7-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. 

Latest Videos

click me!