பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 457ஆவது எபிசோடில் வரதட்சணையாக கேட்கப்பட்ட கார் தொடர்பாக மாப்பிள்ளை சதீஷ், பாண்டியனின் கடைக்கு வந்து காருக்கு தேவையான பணத்தை நானே கொடுத்துவிடுகிறேன். அதனை நீங்கள் வாங்கி நீங்களே கொடுப்பது போன்று கொடுத்துவிடுங்கள் என்று வருங்கால மாமனாரிடம் சொல்கிறார். மேலும், தன்னிடம் சேவிங்ஸ் பணம் இருப்பதாகவும் சொல்லவே, அதெல்லாம் வேண்டாம் என்று பாண்டியனும், அவரது மகன்களும் சொல்லிவிடுகிறார்கள்.
25
Gomathi Visit Temple:
கோயிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்ற கோமதி:
இதைத் தொடர்ந்து கோயிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்ற கோமதி, தங்கமயில், மீனா, ராஜீ மற்றும் அரசி ஆகியோர் தங்குவதற்கு வசதியாக வீடும் ஏற்பாடு செய்யபட்டது. அந்த வீட்டிற்கு வந்த அனைவருக்கும் தேவையான காலை டிபன், டீ, காபி எல்லாவற்றையும் ரெடி பண்ணி கொடுக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஆட்கள் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் பாண்டியன்.
எல்லாம் ஓகே ஆன பிறகு டிரைனில் வந்த களைப்பு தீர அனைவரும் ரெஸ்ட் எடுக்க ரூமிற்கு சென்றுள்ளனர். அப்போது அரசிக்கு மாப்பிள்ளை போன் போட்டு பேசுகிறார். அரசியும் பேசுகிறார். கடைசியில் அரசியை தனியாக சந்திக்க வேண்டும் என்று கேட்கவே உடனே போனை கட் பண்ணிவிடுகிறார். குமாரவேலுவை நினைத்து புலம்பிக் கொண்டிருந்த அரசியை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள்.
45
Pazhanivel Sukanya Fight:
பழனிவேலுவை சுகன்யா மிரட்டுகிறார்
இறுதியாக பழனிவேல் மற்றும் சுகன்யா காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொஞ்சம் திமிரான தோரணையில் சேரில் அமர்ந்து கொண்டு பழனிக்கு போன் போட்டு எங்க இருக்கீங்க, வீட்டிற்கு வர முடியுமா, முடியாதா, வீட்டிற்கு வரவில்லை என்றால் வீடு வீடாக இருக்காது. வீட்டிற்கு வரவில்லை என்றால் அக்காவிற்கும், மாமாவிற்கும் போன் போட்டு சொல்லிவிடுவேன் என்று பழனிவேலுவை சுகன்யா மிரட்டுகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 457ஆவது எபிசோடு முடிவடைகிறது.
நாளையை எபிசோடில் கோமதியும் அவரது மருமகள்களும் கோயிலுக்கு புறப்படுவது போன்ற காட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. மேலும், சுகன்யா மற்றும் பழனிவேலுவின் சண்டைக்காட்சிகளும் இடம் பெறலாம். அதோடு சக்திவேல், குமாரவேல் தொடர்பான காட்சிகள் இடம் பெறுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.