Vijay's 'Sachein' Rerelease: Mysskin's opinion! விஜய் நடித்த சச்சின் படம் 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அப்படத்தை ஏப்ரல் 18ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. சச்சின் திரைப்படத்தின் ரீ-ரிலீசை முன்னிட்டு அதன் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோ நேற்று இரவு திரையிடப்பட்டது. இதில் இயக்குனர் மிஷ்கினும் கலந்துகொண்டு சச்சின் படத்தை கண்டுரசித்தார். அவர் இப்படத்தை தற்போது தான் முதன்முறையாக பார்த்துள்ளாராம்.
24
Sachein Re-Release
சச்சின் ரிவ்யூ சொன்ன மிஷ்கின்
சச்சின் படம் பார்த்த பின் மிஷ்கின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது படத்தை பற்றிய தனது அனுபவத்தை மிஷ்கின் பகிர்ந்துகொண்டார். அதன்படி அவர் கூறியதாவது : “கல்லூரி காலத்திற்கு சென்றது போல் இருந்தது. டைம் டிராவல் பண்ணியது போல் இருந்துச்சு. நான் 27 வருஷம் சினிமாவில் இருந்திருக்கிறேன். நான் சந்தித்த மிக ஆச்சர்யமான மனிதர் தாணு சார். என்னை ஒரு மகன் போல பார்த்துக்கொண்டார். அவர்தான் சச்சின் படம் பார்க்க என்னை அழைத்தார்.
யூத் படத்தில் தான் என்னுடைய கெரியரை ஆரம்பித்தேன். சச்சின் படம் இப்போ தான் முதன்முறை பார்க்கிறேன். எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. ரொம்ப, ஜாலியான அழகான படம் இது. நாம் லவ் பண்ணும்போது எப்படி குழந்தைத் தனமாக இருப்போமோ.. அந்த குழந்தைத் தனத்தையெல்லாம் வைத்து எடுத்த ஒரு படம் இது. எனக்கு இந்த படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப புடிச்சிருந்தது. இந்த படத்தில் விஜய் மிகவும் ஹேண்ட்சம் ஆக இருக்கிறார். அவருடைய கெரியரில் அவரை மிகவும் அழகாக காட்டிய படம் இதுதான் என நினைக்கிறேன்” என மிஷ்கின் கூறினார்.
44
Director Mysskin about vijay
விஜய் சினிமாவை விட்டு போகக்கூடாது
தொடர்ந்து விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளது பற்றி மிஷ்கினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய் கலைத்துறையை விட்டு போகவே மாட்டார். தொடர்ந்து படங்களில் நடிச்சுக்கிட்டே இருப்பார் என்று தான் நினைக்கிறேன். அவர் அரசியல் வேலைகளை பார்க்க வேண்டும். அதே நேரத்தில் சினிமாவில் நடிக்கவும் வேண்டும். விஜய் போன்ற நடிகரெல்லாம் சினிமாவை விட்டு போவது பெரிய இழப்பு. இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ள விஜய் கலைத்துறையை விட்டு போகக்கூடாது. வருஷத்துக்கு ஒரு படமாவது விஜய் நடிக்க வேண்டும் என மிஷ்கின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.