நடிகர் ஸ்ரீ மீட்கப்பட்டாரா? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

Published : Apr 18, 2025, 10:51 AM IST

நடிகர் ஸ்ரீ குறித்து அவரின் நண்பரும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

PREV
15
நடிகர் ஸ்ரீ மீட்கப்பட்டாரா? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

Lokesh Kanagaraj Statement About Actor Sri : தமிழ் சினிமாவில் நல்ல திறமை இருந்தும் பெரிதும் மதிக்கப்படாத கொண்டாடப்படாத நடிகர் என்றால் அது ஸ்ரீ தான். அவர் கடந்த 2008ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீசன் 2-வில் முதன்மை வேடத்தில் நடித்தார். அதுதான் அவரின் சினிமா கனவிற்கு முதல் அடித்தளமாக அமைந்தது. 

2007ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான "கல்லூரி" திரைப்படத்திற்கான ஆடிஷனில் அவர் தேர்வாகாமல் போனாலும், 2012 இல் வெளியான பாலாஜி சக்திவேலின் "வழக்கு எண் 18/9" படத்தின் மூலம் ஹீரோவானார் ஸ்ரீ. அப்படத்தின் மூலம் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது. 2013 ஆண்டு மிஷ்கின் இயக்கி நடித்த "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" படத்தில் ஸ்ரீக்கு நல்ல பாராட்டுக்களை பெற்றுத்தந்தது.

25
Maanagaram

ஸ்ரீக்கு திருப்புமுனை தந்த மாநகரம்

2015 இல் "சோன்பப்டி" எனும் படத்தில் நடித்த ஸ்ரீ, அதைத்தொடர்ந்து 2016 இல் ஹரீஸ் கல்யாண் உடன் இணைந்து நடித்த வில் அம்பு திரைப்படம் ஹிட் ஆனது. பின்னர் 2017 இல் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான "மாநகரம்" படத்தில் நடித்தார் ஸ்ரீ. அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இன்று டாப் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜின் முதல் ஹீரோ என்கிற பெருமை ஸ்ரீக்கு எப்போதுமே உண்டு. அப்படத்தில் அவரது கதாபாத்திரம் நம்மில் பலரின் பிரதிபலிப்பாக இருக்கும்.

35
Actor Sri

காணாமல் போன ஸ்ரீ

மாநகரம் தந்த மிகப்பெரிய வெற்றியோடு 2017ம் ஆண்டு தமிழில் ஆரம்பிக்கப்பட்ட "பிக்பாஸ்" நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார் ஸ்ரீ. ஆனால் எதிர்பாராத விதமாக 4வது நாளே சில காரணங்களால் அவர் வெளியேறினார். அதோடு சினிமாவை விட்டும் காணாமல் போனார் ஸ்ரீ. 6 வருடங்களுக்கு பின் 2023ம் ஆண்டு யுவராஜ் இயக்கிய "இறுகப்பற்று" படத்தின் மூலம் ரீ என்டரி கொடுத்தார் ஸ்ரீ. அப்படமும் ஹிட்டானது. ஆனால் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. 

இதையும் படியுங்கள்... நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா?சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோஸ்!

45
Sri latest Photos Viral

பரிதாப நிலையில் ஸ்ரீ

திடீரென சில நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தில் வெளியான அவரது புகைப்படங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகவும் மெலிந்த தேகத்துடனும் ஆள் அடையாளமே தெரியாமல் மாறி காட்சியளித்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது போல் இருப்பதாக பலரும் கூறி வந்தனர். மேலும் அவர் போதைப் பழக்கத்தால் இப்படி ஆனதாகவும் சிலர் கூறி வந்தனர். ஆனால் அதையெல்லாம் நடிகர் ஸ்ரீ மறுத்து இருந்தார். அவரை எப்படியாவது மீட்கக்கோரி கோரிக்கைகள் வலுத்தன.

55
Lokesh Kanagaraj Statement

ஸ்ரீ பற்றி லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஸ்ரீ பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஸ்ரீ ராம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தரப்பிலிருந்து வெளியிடப்படும் அறிவிப்பு என குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில், நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி, சோசியல் மீடியாவிலிருந்து விலகி, சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீண்டு நலமுடன் வர அவரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 

அவரைப்பற்றி வரும் தவறான தகவல்களும், வதந்திகளும் தங்களை பாதிப்பதாகவும், ஸ்ரீயின் உடல்நிலை குறித்த வதந்திகளை தவிர்க்குமாறும் அனைத்து தரப்பு ஊடகத்தினரையும் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அவரது உடல்நிலை தொடர்பான ஆட்சேபத்துக்குரிய கருத்துகளுடன் கூடிய நேர்காணல்களை நீக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... Lokesh Kanagaraj Net worth: இயக்குனது 5 படம் தான்; ஆனால் பல கோடிக்கு அதிபதியா மாறிய லோகேஷ் கனகராஜ்!

Read more Photos on
click me!

Recommended Stories