தியேட்டர்களை ஆக்கிரமித்த குட் பேட் அக்லி; OTTக்கு பார்சல் செய்யப்பட்ட எம்புரான் - எப்போ ரிலீஸ்?

Published : Apr 18, 2025, 07:55 AM IST

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டையாடிய எம்புரான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
தியேட்டர்களை ஆக்கிரமித்த குட் பேட் அக்லி; OTTக்கு பார்சல் செய்யப்பட்ட எம்புரான் - எப்போ ரிலீஸ்?

Empuraan Movie Official OTT Release Date : மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மோகன்லால் நடித்த எம்புரான். மார்ச் 27 அன்று வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மலையாளத்தில் முதன்முறையாக 100 கோடி ஷேர் கொடுத்த படமும் எம்புரான் தான். படம் வெளியான சமயத்தில் அதன் காட்சிகள் சில சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு தரப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை ரீ-எடிட் செய்தனர். படத்தில் வில்லனின் பெயர் உட்பட 22க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

24
Empuraan OTT Release

எம்புரான் ஓடிடி ரிலீஸ்

இந்நிலையில், படத்தின் OTT ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி எம்புரான் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது. வருகிற ஏப்ரல் 24ந் தேதி முதல் அப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டாலும் அதில் படத்தின் முழு வெர்ஷன் வெளியாகுமா அல்லது ரீ-எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. அதற்கு அப்படத்தின் எடிட்டர் அகிலேஷ் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் - எம்புரான் பட சர்ச்சைக்கு வில்லன் கொடுத்த நச் பதில்

34
Empuraan

எம்புரான் ரீ-எடிட் வெர்ஷன்

அதன்படி ரீ-எடிட் குறித்து படம் வெளியான பிறகு தான் தனக்குத் தெரியவந்ததாகவும், சிறிய பகுதிகள் தான் மாற்றப்பட்டிருந்தாலும், ஒரு படத்தை ஆரம்பத்தில் இருந்து எடிட் செய்வது போன்ற வேலை இருந்ததாகவும் அவர் கூறினார். எல்லா மொழிகளிலும் இதைச் செய்ய வேண்டியிருந்தது. ஒரு வருடத்திற்கும் மேலான பயணம் எம்புரானுடன் இருந்ததால், இதுபோன்ற ரீ-எடிட் தேவைப்படும் என்று நினைக்கவே இல்லை. எவ்வளவு சிறப்பாக மாற்ற முடியும் என்பது தான் அப்போது யோசித்தது. இப்போது ரீ-எடிட் குறித்து விவாதிப்பதில் அர்த்தமில்லை. 

44
Empuraan Mohanlal

ஓடிடி ரிலீசிலும் மாற்றம் இருக்குமா?

ரீ-எடிட் செய்தாலும், படத்தின் அழகைக் கெடுக்காமல் இருப்பது தான் முக்கியம். படம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுபோன்ற நிகழ்வுகள் மார்க்கெட்டிங் உத்தி என்று கூறுபவர்களிடம், இவ்வளவு பணத்தை வைத்து இப்படிச் செய்வார்களா என்று கேட்கிறேன் என அகிலேஷ் மோகன் அந்த பேட்டியில் கூறினார். மேலும் ஓடிடியில் அப்படம் ரீ-எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் தான் வெளியாகும் என்பதையும் அவர் உறுதிபடக் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... சர்ச்சைகளை கடந்து வசூல் வேட்டையாடும் மோகன்லாலின் எம்பூரான் – உலகளவில் ரூ.250 கோடி வசூல் குவித்து சாதனை!

Read more Photos on
click me!

Recommended Stories