Sonakshi Sinha: சோனாக்ஷி சின்ஹா விவாகரத்து கிசுகிசு; நடிகையின் தரமான பதிலடி!

Published : Apr 17, 2025, 07:08 PM IST

உங்கள் விவாகரத்து நெருங்கி விட்டது என சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாஹிர் இக்பாலை சாடி கமெண்ட் செய்த சில சர்ச்சை பதிவுகள் மற்றும் அது சார்ந்த கிசுகிசுவுக்கு நடிகை தரமான பதிலடி கொடுத்துள்ளார்.  

PREV
14
Sonakshi Sinha: சோனாக்ஷி சின்ஹா விவாகரத்து கிசுகிசு; நடிகையின் தரமான பதிலடி!

சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவுத் திருமணம்

சோனாக்ஷி சின்ஹாவும் ஜாஹிர் இக்பாலும் சுமார் 7 ஆண்டுகள் காதலித்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் இந்த ஜோடி. இவர்களின் திருமணத்தில் சோனாக்ஷி சின்ஹாவின் தந்தைக்கு விருப்பம் இல்லை என கூறப்பட்டாலும், பின்னர் மகளின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

24
Sonakshi Weds 7 Year Boy Friend:

7 வருட காதலுக்குப் பிறகு ஜாஹிர்-சோனாக்ஷி திருமணம்:

7 வருட காதலனை பல போராட்டங்களுக்கு பின்னரே சோனாக்ஷி கரம்பிடித்தார் என்பதால்... ரசிகர்கள் பலர் இவரின் திருமண செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்தனர். இதன் காரணமாக சோனாக்ஷியும் - ஜாஹிரும் தங்கள் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டு அதன் கமெண்ட் செக்ஷனை முடக்கி வைத்திருந்தனர். இதுவே தற்போது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.

Sonakshi Sinha Pregnant: திருமணமான ஒரே வாரத்தில் மருத்துவ பரிசோதனை! கர்ப்பமாக இருக்கிறாரா சோனாக்ஷி சின்ஹா.?
 

34
Sonakshi Slam Netizens

விவாகரத்து கேள்விக்கு சோனாக்ஷி அளித்த பதிலடி

சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாஹிர் இக்பாலின் ரசிகர் ஒருவர், உருவாக்கிய இன்ஸ்டாகிராம் ரீல் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அதில், "உங்கள் காதலர் உங்களிடம் அதிக அக்கறை காட்டவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்" என்று நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதோ போல் மற்றொருவர் , "உங்கள் விவாகரத்து நெருங்கிவிட்டது" என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு சோனாக்ஷி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சோனாக்ஷி முதலில் உன் அம்மா அப்பா விவாகரத்து செய்வார்கள், பிறகு நாங்கள்... இது சத்தியம்!" என்று பதிலளித்தார்.
 

44
Sonakshi Replay

சோனாக்ஷியின் பதிலால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள்

மேலும் சோனாக்ஷி, "இப்போதெல்லாம் மக்கள் மகிழ்ச்சியான ஜோடிகளைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள்," என்று கூறியுள்ளார். மற்றொருவர், "உண்மையைச் சொல்லப் போனால், சோனாவும் ஜாஹிரும் தான் திரையுலகின் மகிழ்ச்சியான ஜோடி" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு 44 வருட பழமையான அம்மாவின் புடவையை கட்டி இருந்த சோனாக்ஷி! வரவேற்பு புடவையின் ரேட் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories