Published : Apr 17, 2025, 05:43 PM ISTUpdated : Apr 17, 2025, 05:48 PM IST
அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா சர்ஜா கூடிய விரைவில் தன்னுடைய 13 வருட காதலரை திருமண செய்ய உள்ளார். இவர் காதலருடன் இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான அர்ஜுன், தமிழ் சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டினார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக இருக்கும் இவர், 90-ஸ் களில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக இருந்த நிலையில், சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்களில் வெயிட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தளபதி விஜயுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி போன்ற படங்களில் நடித்தார். தற்போது இவர் இயக்கி வரும் சீதா என்கிற திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.
25
Arjun Married Kannada Actress Nivedhitha:
நடிகை நிவேதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்:
நடிகர் அர்ஜுன், கன்னட நடிகையான நிவேதிதா என்பவரை 1988-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவை விஷால் நடிப்பில் வெளியான 'பட்டது யானை' திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இதை தொடர்ந்து, தன்னுடைய அப்பாவின் அர்ஜுன் இயக்கத்தில், அவரே தயாரித்த 'சொல்லிவிடவா' என்கிற படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில், தந்தையின் பிஸ்னஸ் மற்றும் பட நிறுவன பணிகளை கவனித்து வருகிறார்.
அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வயாவுக்கு சினிமாவில் ஆர்வம் இருந்தாலும், இளைய மகள் அஞ்சனாவுக்கு சினிமாவின் மீது துளியும் ஆர்வம் இலை. ஒரு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதே இவரின் ஆசை. எனவே கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தாயாருக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். இங்கு செய்யப்படும் ஹேண்ட் பேக்குகள் அனைத்தும் பழங்களின் தோல் மற்றும் காய் கறிகள் தோல் நார் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது.
45
Aishwarya Arjun Weds Last Year:
போன வருடம் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது:
தன்னுடைய நிறுவனத்தின் மாடலாக இவரே இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டு அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இந்த ஆண்டு 2-ஆவது மகள் அஞ்சனாவுக்கும் திருமணம் நடக்க உள்ளது உறுதியாகி உள்ளது.
Anjana Accept 13 years boy friend marriage proposal
13 வருட காதலரை மணக்கிறார்:
அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்று கொண்டதாக கூறி, அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து கூடிய விரைவில் இவர்களது திருமணம் குறித்த தாக்கல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனாவின் காதலர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.